விருசபர்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விருசபர்வன் (Vrishparva) இந்து புராணங்களில் மற்றும் மகாபாரதம் போன்ற தொன்ம நூல்களில் கூறப்படும், மந்திர-தந்திரங்களில் தேர்ந்த அசுரர்கள் எனப்படும் தானவர்களின் அரசன் ஆவான். தனது குலகுருவான சுக்கிராச்சாரியார் உதவியுடன் இந்திரன் முதலான தேவர்களைப் பல போர்களில் வெற்றி கொண்டவன்.

சுக்கிராச்சாரியரிடம், மரணித்தவர்களை மீண்டும் எழுப்பும் மந்திரத்தை அறிய வந்த பிரகஸ்பதியின் மகன் கசனை, விருசபர்வ மன்னரின் ஆட்கள், பல முறை கொல்ல முயன்ற போது, கசன் மீதான் அன்பினால் தேவயானியால் காக்கப்பட்டான்.

விருசபர்வனின் மகள் சர்மிஷ்டை தேவயானியின் தோழியாவாள். தேவயானி யயாதியை மணக்கும் போது, சர்மிஷ்டையை வரதட்சனையாக தேவயானியுடன் விருசபர்வனால் அனுப்பி வைக்கப்பட்டவர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விருசபர்வன்&oldid=2577428" இருந்து மீள்விக்கப்பட்டது