விய்யூர் உயர் பாதுகாப்பு சிறைச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விய்யூர் உயர் பாதுகாப்புச் சிறைச்சாலை (Viyyur High Security Prison) இந்தியாவின் கேரள மாநிலம், திருச்சூர் நகரிலுள்ள விய்யூரில் அமைந்துள்ளது. இச்சிறை ஓர் உயர் தொழில்நுட்பம் கொண்ட உயர் பாதுகாப்பு சிறையாகும். சிறைச்சாலையின் பாதி வான்வழி தாக்குதலை எதிர்க்கும் வகையில் நிலத்தடியில் அமைந்திருக்கிறது. சிறைச்சாலையில் 600 கைதிகளைச் சிறைவைக்க இயலும். 192 சிறை அலகுகள் சிறையில் உள்ளன. நிர்வாகப் பிரிவுடன் மூன்று மாடி கட்டிடம் ஒன்பது ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

வரலாறு[தொகு]

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி 2011 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 அன்று திருச்சூர் நகரத்தின் விய்யூரில் முதல் உயர் பாதுகாப்பு சிறைக்கான அடிக்கல் நாட்டினார். விய்யூரிலுள்ள மத்திய சிறைக்கு அருகில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 20 கோடி ரூபாய் செலவில் சிறையை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகளில் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநிலத்தின் இந்த முதல் உயர் பாதுகாப்பு சிறைச்சாலை 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 03 அன்றுதான் திறக்கப்பட்டது.

இரண்டு சுற்றுச் சுவர்கள், பார்வையாளர்களுக்கு ஆறு அடுக்கு பாதுகாப்பு சோதனை, சிறைக்குள் ஒவ்வொரு அலகிலும் மூடியசுற்று தொலைக்காட்சி, இரட்டை அடுக்கு புற சுவர், ஐந்து கண்காணிப்பு கோபுரங்கள், சோதனைகளுக்கான உயர்தொழில்நுட்ப காணொலி மாநாட்டு மண்டபம், இரண்டு நீரியல் வாயில்கள், தனிச் சிறைவாசிகளுக்கான ஒற்றை அலகு அறைகள் மற்றும் சிறு அறுவைச் சிகிச்சை வசதி கொண்ட மருத்துவமனை போன்ற வசதிகள் விய்யூர் உயர் பாதுகாப்பு சிறையில் செய்யப்பட்டுள்ளன. ஊழியர்கள் மற்றும் பிறரின் நுழைவு மற்றும் வெளியேற ஒரு கைரேகை பூட்டு முறையும் உள்ளது. மற்ற அலகுகளில் உள்ள கைதிகள் ஒருவருக்கொருவர் பார்க்காத வகையில் அலகுகள் கட்டப்பட்டுள்ளன.

கையெறி தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக சிறைச் சுவரைச் சுற்றி 250 சதுர அடி புல்வெளி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப பின்னணி கொண்ட பணியாளர்கள் நவீன வசதிகளுடன் நிறுத்தப்படுகிறார்கள்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thrissur sub-jail to be upgraded". தி இந்து. 2011-06-18. Archived from the original on 2011-06-21. பார்க்கப்பட்ட நாள் 2010-11-26.
  2. "Govt. to set up State Bureau of Investigation". The Hindu. Archived from the original on 2011-11-19. பார்க்கப்பட்ட நாள் 2010-11-26.
  3. "State's first high security prison to come up in Viyyur". தி இந்து. 2011-06-18. Archived from the original on 2011-06-21. பார்க்கப்பட்ட நாள் 2010-11-26.
  4. "New high security prison". Manoramaonline.com. Archived from the original on 2011-11-27. பார்க்கப்பட்ட நாள் 2010-11-26.
  5. "High security jail in Viyyur by 2014". Deccan Chronicle. Archived from the original on 2011-06-19. பார்க்கப்பட்ட நாள் 2010-11-26.