விம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விம் உரைத்திருத்தியைப் பயன்படுத்தி பீ எச் பீ நிரலாக்கம் செய்யப்படுகிறது. வரியெண்கள், தன்னியக்க நிற வேறுபாடு, உட்தள்ளல், தன்னியக்க வாக்கிய நிறைவு வசதிகளைக் கவனிக்க
விம் இற்கான ஜீ டீ கே அடிப்படையில் அமைந்த வரைகலை இடைமுகப்பு

விம் (vim) என்பது யுனிக்ஸ் இயங்குதளங்களில் காணப்படும் ஒரு சிறப்பு உரைத்திருத்தி மென்பொருளாகும்.இம் மென்பொருளானது vi மென்பொருளினை அடிப்படையாகக்கொண்டு மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.

விம், க்னூ பொதுமக்கள் உரிமத்தோடு ஒத்திசையக்கூடிய உரிமமொன்றின் அடிப்படையில் திறந்த மூலமாக வழங்கப்படுகிறது.

இவ்வுரைத்திருத்தியானது ஏராளமான வசதிகளைக் கொண்டிருப்பதுடன் நிரலாளர்களின் உரைத்திருத்தி என்ற புகழையும் லினக்ஸ்/யுனிக்ஸ் வல்லுனர்களிடையே பெற்றிருக்கிறது. இவ்வுரைத்திருத்தி வரைகலை இடைமுகப்பினைக் கொண்டதல்ல. இது முனையத்திலேயே இயங்கும் உரை வழி இடைமுகப்பைக்கொண்ட மென்பொருளாகும். இதற்கான வரைகலை இடைமுகப்புக்களும் ஆங்காங்கு காணப்படுகின்றன என்றபோதும் இதன் உரைவழி இடைமுகப்பே மிகுந்த வரவேற்பைப்பெற்றதும் சக்திமிக்கதுமாகும்.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=விம்&oldid=1348721" இருந்து மீள்விக்கப்பட்டது