விமலாபாய் தேஷ்முக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விமலாபாய் தேஷ்முக்
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்
கருநாடக அரசு[1]
பதவியில்
1998 - 1999
முன்னையவர்பி. டி. லலிதா நாயக்
பின்னவர்மோத்தம்மா
தொகுதிமுத்தேபிகாலா சட்டமன்றத் தொகுதி[2][3]
உறுப்பினர்- கர்நாடக சட்டப் பேரவை
பதவியில்
26 நவம்பர் 1994 – 7 அக்டோபர் 1999
முன்னையவர்சி. எஸ் .நாடகௌடா
பின்னவர்சி. எஸ் .நாடகௌடா
தொகுதிமுத்தேபிகாலா சட்டமன்றத் தொகுதி[4]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
விமலாபாய் சோமசேகர் தேசாய்

(1949-10-21)21 அக்டோபர் 1949
முர்கோட், சம்பகான் வட்டம், பெல்காம் மாவட்டம், பம்மாய் மாகாணம் (தற்பொழுது பைல்ஹோங்கல் வட்டம், பெல்காம் மாவட்டம், கருநாடகம்)
இறப்பு22 சூலை 2018(2018-07-22) (அகவை 68)[5]
பிஜாப்பூர், கருநாடகம்[6]
அரசியல் கட்சிஜனதா தளம் (சமயச்சார்பற்ற) {{{1}}}
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்ஜகதேவராவ் சங்கனபசப்பா தேஷ்முக் (1991, இறப்பு)[7][8]
பிள்ளைகள்ஒர் மகள் (நதினி நிலெஷ்)
வாழிடம்(s)நலதாவாட், பீசப்பூர் மாவட்டம், கருநாடகம்[9]

விமலாபாய் ஜெகதேவராவ் தேஷ்முக் என்று அழைக்கப்படும் விமலாபாய் தேஷ்முக் (Vimalabai Deshmukh) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கருநாடக அரசாங்கத்தில் முன்னாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தார்.[10] 1994ஆம் ஆண்டில்[11] கருநாடகா சட்டமன்றத்தில் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள முட்டேபிகால் தொகுதியிலிருந்து கருநாடகச் சட்டமன்றத்திற்குச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12][13]

இளமை[தொகு]

விமலாபாய் அப்போதைய பம்பாய் மாநிலத்தின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள சம்ப்கான் வட்டத்தில் முர்கோட் கிராமத்தில் (இப்போது கர்நாடகா பெல்காம் மாவட்டத்தின் பைலோங்கல் வட்டம்) சோமாசேகர் தேசாய் மற்றும் சாந்தாபாய் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். 1966ஆம் ஆண்டில் சிறீ முரகோடா சிக்ஷனா சமிதி உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியினை முடித்தார்.[14] இவர் ஜ. கே. தேவராவ் சங்கனபசப்பா தேஷ்முக்கை மணந்தார்.[15] இவர் 1978,1983 மற்றும் 1985ஆம் ஆண்டுகளில் கருநாடகா பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள முட்டேபிகால் சட்டமன்றத் தொகுதியிலிருந்து கருநாடகச் சட்டமன்றத்திற்குச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16] இவரது ஒரே மகள் நந்தினி தேஷ்முக் மகாராட்டிரா சட்டமன்றத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலேஷ் தேஷ்முக் மணந்தார். 2009ஆம் ஆண்டு யவத்மால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலேஷ் தேஷ்முக், 2013ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். தேஷ்முக் 2013-இல் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட இடைத்தேர்தல்களில் யாவத்மால் தொகுதியில் வெற்றி பெற்றார்.

அரசியல்[தொகு]

விமலாபாய் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற கருநாடகச் சட்டமன்றத் தேர்தலில் முட்டேபிஹால் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[17] இவர் தனது நெருங்கிய போட்டியாளரான சி. எஸ். நடகௌடா தோற்கடித்தார்.[18], பின்னர் 1998ஆம் ஆண்டில் ஜே. எச். படேல் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.[19] அமைச்சர் பி. டி. லலிதா நாயக் மகன் விசுவஜித், பெங்களூரில் உள்ள பி. ஆர். அம்பேத்கர் மருத்துவக் கல்லூரியில் அம்பேத்கரின் சிலையைச் சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதன் காரணமாக[20] இவர் 1999 வரை வரை பதவியிலிருந்தார்.[21] பின்னர் இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முத்தேபிகாலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[22] இவர் தனது பாரம்பரிய முத்தேபிகாலா தொகுதியிலிருந்து 2004 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் போட்டியிட ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியில் சேர்ந்தார். ஆனால் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற முடியவில்லை.[23] பி. எஸ். எடியூரப்பா இவரைச் சமயச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். இவருக்கு 2013 தேர்தலின் போது கருநாடக சனதா கட்சி சார்பில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் முட்டேபிகாலா தொகுதியில் தோல்வியடைந்தார்.

இறப்பு[தொகு]

நீண்டகால நோய்வாய்ப்பட்ட பிறகு, இவர் தனது பீஜப்பூர் இல்லத்தில் 22 சூலை 2018 அன்று இறந்தார். இவர் தனது மூன்று மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ex-Minister Vimalabai Deshmukh Passes Away https://starofmysore.com/ex-minister-vimalabai-deshmukh-passes-away/
  2. Former minister Vimalabai Deshmukh no more https://www.molitics.in/news/75959/former-minister-vimalabai-deshmukh-no-more
  3. Former Karnataka Minister Vimalabai Deshmukh passes away https://www.thenewsminute.com/article/former-karnataka-minister-vimalabai-deshmukh-passes-away-85206
  4. https://resultuniversity.com/election/muddebihal-karnataka-assembly-constituency Muddebihal Assembly Constituency Election Result
  5. Former minister Vimalabai Deshmukh no more https://www.deccanherald.com/state/former-minister-vimalabai-682790.html
  6. Former Karnataka Minister Vimalabai Deshmukh Passes Away https://www.mid-day.com/articles/former-karnataka-minister-vimalabai-deshmukh-passes-away/19629194
  7. Former Karnataka Minister Vimalabai Deshmukh passes away https://www.outlookindia.com/newsscroll/former-karnataka-minister-vimalabai-deshmukh-passes-away/1354294
  8. {{cite web}}: Empty citation (help)
  9. VIMALABAI DESHAMUKH MUDDEBIHAL (BIJAPUR) http://myneta.info/karnataka2013/candidate.php?candidate_id=771
  10. "Former Karnataka Minister Vimalabai Deshmukh passes away | India.com". www.india.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
  11. "ರಾಜ್ಯದ ಈ ಜಿಲ್ಲೆಯಲ್ಲಿ ಇಲ್ಲಿಯವರೆಗೂ ಗೆದ್ದಿರುವುದು ಕೇವಲ ಇಬ್ಬರು ಮಹಿಳೆಯರು ಮಾತ್ರ". Asianet News Network Pvt Ltd (in கன்னடம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
  12. "Muddebihal Election and Results 2023, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
  13. Karnataka 1994 https://eci.gov.in/files/file/3780-karnataka-1994/
  14. "VIMALABAI JAGADEVARAO DESHAMUKHA(JD(S)):Constituency- Muddebihal(BIJAPUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
  15. https://eci.gov.in/files/file/3776-karnataka-1978/ Karnataka 1978
  16. "Former Karnataka women and child welfare minister Vimalabai Deshmukh dies at 70". coastaldigest.com - The Trusted News Portal of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
  17. "Avenging Ambedkar". http://www.outlookindia.com/article/Avenging-Ambedkar/200396. 
  18. Former Karnataka Minister Vimalabai Deshmukh Passes Away https://www.newslocker.com/en-in/news/general-india/former-karnataka-minister-vimalabai-deshmukh-passes-away/view/
  19. "muddebihal assembly election results in Karnataka". elections.traceall.in. பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
  20. "ಮಾಜಿ ಸಚಿವೆ ವಿಮಲಾಬಾಯಿ ದೇಶಮುಖ ನಿಧನ | ಸಂಜೆವಾಣಿಗೆ ಸ್ವಾಗತ". 23 July 2018. Archived from the original on 23 July 2018.
  21. https://www.news18.com/assembly-elections-2018/karnataka/muddebihal-election-result/ Muddebihal (GEN)
  22. "ಮಾಜಿ ಸಚಿವೆ ವಿಮಲಾಬಾಯಿ ದೇಶಮುಖ್ ನಿಧನ". Vijay Karnataka (in கன்னடம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
  23. "Ex-minister Vimala Bai passes away". english.varthabharati.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலாபாய்_தேஷ்முக்&oldid=3908370" இலிருந்து மீள்விக்கப்பட்டது