வின்ரவுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்ரவுட்
உருவாக்குனர்கேரியோ டெக்னோலொஜீஸ்
அண்மை வெளியீடு6.71
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் வின்டோஸ்
மென்பொருள் வகைமைவலையமைப்புப் பாதுகாப்புச்சுவர்
உரிமம்Proprietary
இணையத்தளம்www.kerio.com/kwf

கேரியோ வின்ரவுட் பயர்வால் ரைனி சாப்ட்வேர் மற்றும் கேரியோ ரெக்னோலொஜிஸ் விருத்தி செய்பட்ட பாதுகாப்புச் சுவர் (பயர்வால்), புரொக்சிசேவர், DHCP சேவர் மற்றும் DNS வசதிகளுடன் கணினி ஒன்றிற்கான இணைய வேகத்தைக் கட்டுப்படுத்தும் வசதியுடைய ஓர் மென்பொருள் ஆகும். இதில் ஒருங்கிணைக்கப்பட்ட மெக்காபி McAfee ஆண்டிவரைஸ் வசதிகளுடன் இணையத்தில் உள்ள தேவையற்றவற்றை கட்டுப்படுத்தும் வசதிகளும் உடையது.

வெளியீட்டு வரலாறு்[தொகு]

பதிப்பு வெளியீட்டுத் திகதி முக்கிய மாற்றங்கள்
3 இல் இருந்து 4.x இற்கு 1998 வின்ரவுட் புறோ பதிப்பு 3 மற்றும் 4 வின்டோஸ் 98 மற்றும் விண்டோஸ் எண்டி தளத்திற்கான ஆதரவுடன் வெளிவந்தது.
5.0 21 பெப்ரவரி 2003 கேரியோ வர்தகச் சின்னத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது பதிப்பாகும். இப்பதிப்பில் டாஸ் இல் தங்கியிருக்கும் விண்டோஸ் கைவிடப்பட்டது.
5.1 25 ஆகஸ்ட் 2003 நிகழ்நிலையில் பயனரைக் கண்காணிக்கும் முறை மேம்படுத்தப்பட்டது. (ஹொஸ்ட்/பயனர் திரை), இணைய இணைப்பு துண்டிக்கபடாதிருப்பதற்கான ஆதரவும், SIP protocol inspector - transparent handling of SIP through NAT, Advanced logging options - log rotation and syslog support, விருப்பத்திற்கேற்ப டிஎன்எஸ் தேவைகளை முன்னெடுத்தல், தேவைக்கேற்றவாறு மீயிணைப்பு விதிகளை அனுசரிக்காத பக்கங்களை மீள்வழிநடத்தும் வசதி, கிளையண்டகள் பீர்-பீர் முறையிலான கோப்புக்களை வாங்கி வழங்கி என்றவாறல்லாமல் வலையமைப்பில் இருக்கும் கணினிகளில் கோப்புக்களைப் பரிமாறுவதைக் கண்டுபிடிக்கும் வசதி, தானியக்கா முறையில் மேம்படுத்தல்களைக் கண்டறிந்து நிறுவும் வசதி, ஐபி முகவரிகளைப் அல்லாமல் டிஎன்எஸ் (DNS) பாவிக்கும் வசதி, மொஸிலா உலாவிகள் (மொஸிலா 1.4 உம் அதற்கு மேம்பட்ட பதிப்புக்களுக்கான ஆதரவு)
6.0 7 ஜூன் 2004 ஒருங்கிணைக்கப்பட்ட வாங்கி/வழங்கி மற்றும் வழங்கி வழங்கிக்கான மெய்நிகர்வலையமைப்புத் தீர்வுகள். எச்சரிக்கைகள் மற்றும் அறிவு, POP3 மற்றும் SMTP முறையில் அமைந்த மின்னஞ்சல்களிற்கு நச்சுநிரற் காப்பு, மேம்படுத்தப்பட்ட நிகழ்நிலையில் பயனரைக் கண்காணிப்பதுடன் இணைய நெரிசலைக் கண்காணிக்கும் வசதி, பீர் ரு பீர் என்னும் கோப்புக்களை பரிமாற்றும் முறையை நீக்கும் வசதி மற்றும் விஸ்நெட்டிக் ஆண்டிவரைஸ் பொருத்து 4.
6.1 23 ஜூன் 2005 பயனரை ஆக்டிவ் டிரைக்ரிறி டொமைகளுடன் சேர்க்கும் வசதி. ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்டிவ் டிரைக்டியின் ஆதரவு, கேரியோ வாங்கியல்லாத Clientless SSL-VPN(இணையமூடான பாதுகாப்பான முறையில் அகவலையமைப்பினை அணுகுதல்), பிரத்தியேக மெய்நிகர் வலையைப்புச் சுரங்கப்பாதைகளை வேண்டியவாறு வடிவமைத்தல் போன்றன. எசுப்பானி மொழியாக்கம் செய்யப்பட்டது.
6.2 3 மார்ச் 2006 பயனர்களின் இணைய அணுக்கவேகத்தி மட்டுப்படுத்தல். இரட்டை நச்சுநிரற் பாதுகாப்பு, நிர்வாகக் கன்சோலில் இருந்து மென்பொருளைப் பதிவுசெய்யும் முறை, பிரத்தியேக மெய்நிகர் வலையமைபில் 64 விண்டோஸ் கணினிகளுக்கான ஆதரவு அறிமுகம்
6.3 29 மார்ச் 2007 புள்ளிவிபரவியலும் அறிக்கையிடலும், 64 பிட் கணிகளுக்கான ஆதரவு, விண்டோஸ் விஸ்டா ஆதரவு. மற்றும் மேம்படுத்தப்பட்ட பீர் ரு பீர் என்கின்ற கோப்புக்களைப் பகிரும் முறையை இல்லதொழிக்கும் முறை.
6.4 17 செப்டம்பர் 2007 மேம்படுத்தப்பட்ட இணையமூடான கண்காணிப்பு, அச்சியந்திரத்திற்கு வசதியான வகையிலான அறிக்கைகள், வினைத்திறன் மேம்படுத்தல்கள் மற்றும் நிகழ்நிலை டிஎன்எஸ் ஆதரவு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்ரவுட்&oldid=1396751" இலிருந்து மீள்விக்கப்பட்டது