வின்கா குறியீடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வின்காவில், 8.5 மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட மட்பாண்டத்தின் படம்.
"M" போன்ற குறியீட்டைக் கொண்ட ஒரு மட்பாண்டத் துண்டு.

"வின்கா எழுத்துக்கள்", "பழைய ஐரோப்பிய எழுத்து" போன்ற பெயர்களாலும் குறிக்கப்படும் வின்கா குறியீடுகள் என்பன தென்கிழக்கு ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தியகாலத் தொல்பொருட்களில் காணப்படும் குறியீடுகளைக் குறிக்கும். சில ஆய்வாளர்கள், கிமி 6000-4000 ஆண்டுக் காலப் பகுதியில் இப் பகுதியில் வாழ்ந்த வின்கா பண்பாட்டினரின் மொழிக்குரிய எழுத்துக்களாக இவை இருக்கலாம் எனக் கருதுகின்றனர். எனினும் பலர் இது குறித்து ஐயம் தெரிவிக்கின்றனர். மிகவும் சுருக்கமான குறியீடுகளையும், திரும்பத்திரும்ப வரும் குறியீடுகள் குறைவாக இருப்பதையும் சான்றாகக் காட்டி இது ஒரு எழுத்துமுறையைச் சார்ந்த எழுத்துக்களாக இருக்க முடியாது என இவர்கள் கூறுகின்றனர். இதுவரையில் கிமு 3000 ஆண்டுக் காலப்பகுதியில் உருவான சுமேரிய ஆப்பெழுத்துக்களே உலகின் முதல் எழுத்து முறையாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. எனவே வின்கா குறியீடுகள் ஒருவகை எழுத்துக்கு முந்திய குறியீடுகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இக் குறியீடுகள் பொருள் குறித்திருக்கக் கூடும் எனினும் மொழியொன்றை எழுதப் பயன்பட்டிருக்க முடியாது எனப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்கா_குறியீடுகள்&oldid=2220708" இருந்து மீள்விக்கப்பட்டது