வினோத் ரெயினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வினோத் ரெயினா
இறப்புசெப்டம்பர் 12, 2013
தேசியம்இந்தியா
பணிகல்வியாளர், ஆய்வாளர், சமுகப் போராளி

வினோத் ரெயினா (Vinod Raina, இறப்பு: செப்டம்பர் 12, 2013) ஓர் இந்தியக் கல்வியாளர். இவர் கல்வி உரிமை சட்டம் இயற்றுவதில் ஓர் உறுப்பினராக இருந்தார்.[1][2][3]

வாழ்க்கை[தொகு]

இவர் தில்லிப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயன்று பின் அங்கு 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். பின் பணியைத் துறந்து இந்தியாவில் கல்வியில் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அவர் பாரத் கியான் விஞ்ஞான் சமிதி, அகில இந்திய மக்கள் அறிவியல் வலையமைப்பு ஆகியவற்றின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்தார். இவர் போபால் விசவாய்வுக்கசிவு பேரிடர் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காகப் பணியாற்றியுள்ளார்.

கல்வி உரிமை சட்டம்[தொகு]

இவர்கள் தான் படிக்கவேண்டும் இவர்கள் படிக்கக் கூடாது என்று இருந்த தேசத்தில், கல்வி என்பது ஒவ்வொருவரின் உரிமை அந்த உரிமை மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட அனைவருக்கும் இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் வரைவு திட்டத்தில் அதற்கு அடித்தளமிட்டவர். மேலும் அறிவியல் என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நோக்கத்தோடு மக்கள் அறிவியல் இயக்கத்தின் முன்னோடியாகச் செயல்பட்டவர். எளிய மக்களுக்கும் கல்வி கிடைக்கவேண்டும் அதற்காக முழு நேரத்தையும் செலவிட்டார்.

மேலும், கல்விக்காகப் பணி செய்து வருகின்ற ஏக்லவ்யா மற்றும் பாரத் கியான் விஞ்ஞான் சமிதி அமைப்புகளைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். கல்வியைக் கடைசி மனிதனும் பெற வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களாகும்.

இறப்பு[தொகு]

அவர் செப்டம்பர் 12, 2013 அன்று புற்றுநோயால் இறந்தார்.

விருதுகள்[தொகு]

  • ஆய்வாளர் - ஹோமி பாபா
  • ஆய்வாளர் - நேரு நினைவுக் கூடம் மற்றும் நூலகம், புது தில்லி
  • மதிப்புறு ஆய்வாளர் - இந்திய அறிவியல் எழுத்தாளர்கள் சங்கம்.
  • ஆசிய தலைமைத்துராய்வாளர் - 2002 (ஜப்பான்).
  • டாக்டர் ரெய்னா உலக சமூக பேரவையின் சர்வதேச கவுன்சில் உறுப்பினராக இருக்கிறார்.

புத்தகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chowdhury, Kavita (4 April 2011). "Only 57 per cent children going to school: RTE Act report". India Today. https://www.indiatoday.in/india/north/story/only-57-per-cent-children-going-to-school-rte-act-report-131579-2011-04-04. பார்த்த நாள்: 16 July 2019. 
  2. "In a first, women steal literacy lead over men - Hindustan Times". மூல முகவரியிலிருந்து 2011-04-06 அன்று பரணிடப்பட்டது.
  3. Ghosh, jayati (1 November 2013). "A life well lived". Frontline. http://www.frontline.in/columns/Jayati_Ghosh/a-life-well-lived/article5236439.ece. பார்த்த நாள்: 23 October 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_ரெயினா&oldid=2801228" இருந்து மீள்விக்கப்பட்டது