வினைல்சைக்ளோயெக்சேன் டையாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினைல்சைக்ளோயெக்சேன் டையாக்சைடு
வினைல்சைக்ளோயெக்சேன் டையாக்சைடின் மூலக்கூற்று கட்டமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-ஆக்சிரேனைல்-7-ஆக்சாமைசைக்ளோ[4.1.0]எப்டேன்
வேறு பெயர்கள்
1,2-எப்பாக்சி-4-(எப்பக்சியெத்தில்)சைக்ளோயெக்சேன்
4-வினைல்சைக்ளோயெக்சேன் டையெப்பாக்சைடு
இனங்காட்டிகள்
106-87-6
Abbreviations VCD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7833
 • C1CC2C(O2)CC1C3CO3
பண்புகள்
C8H12O2
வாய்ப்பாட்டு எடை 140.18 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்[1]
அடர்த்தி 1.09 கி•செ.மீ−3[2][3]
உருகுநிலை −108.9 °C (−164.0 °F; 164.2 K)[4]
கொதிநிலை 227 °C (441 °F; 500 K)[4]
ஆவியமுக்கம் 13 பாசுக்கல் (20 °செல்சியசில்) [4]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

4-வினைல்சைக்ளோயெக்சேன் டையாக்சைடு (4-Vinylcyclohexene dioxide) என்பது C8H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் இரண்டு எப்பாக்சைடு வேதி வினைக்குழுக்களைப் பெற்றிருக்கும். தொழிற்சாலைகளில் எப்பாக்சைடு பிசின்களைத் தயாரிக்கும்போது ஒரு பலபடி சங்கிலியை மற்றொரு பலபடிச் சங்கிலியுடன் இணைக்க உதவும் குறுக்கு இணைப்பு முகவர் எனப்படும் ஒரு பிணைப்பாகப் பயன்படுத்தப்படுகிறது[5][6]. பெரும்பாலும் 4-வினைல்சைக்ளோயெக்சேன் டையாக்சைடு நிறமற்று நீர்ம நிலையில் உள்ளது. ஒரு இடைநிலை விளைபொருளாக கரிமச் சேர்மங்களை தொகுப்பு முறையில் தயாரிக்கவும் இது பயன்படுகிறது[2].

எலிகள் மற்றும் சுண்டெலிகளின் அண்டச்சுரப்பிகளில் காணப்படும் முதிர்ச்சியடையாத சினைமுட்டைகளை இச்சேர்மம் கொல்கிறது[7][8][9]. பூச்சிக் கட்டுப்பாட்டு செயல்முறையில் எலிகளின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காக இது ஒரு நச்சு முகவராகப் பயன்படுத்தப்படுகிறது[10].

தயாரிப்பும் பண்புகளும்[தொகு]

4-வினைல்சைக்ளோயெக்சேனுடன் பெராக்சி அமிலத்தைச் சேர்த்து எப்பாக்சினேற்றம் செய்து 4-வினைல்சைக்ளோயெக்சேன் டையாக்சைடு தயாரிக்கப்படுகிறது[5]. இதன் ஒப்படர்த்தி 15 மில்லிபாசுக்கல்-வினாடியாகும்[5].

பாதுகாப்பு[தொகு]

ஆவியாகும் பிற 4-வினைல்சைக்ளோயெக்சேன் டையாக்சைடுகள் போல 4-வினைல்சைக்ளோயெக்சேன் டையாக்சைடும் ஒரு ஆல்கைலேற்றும் முகவராகச் செயல்படுகிறது[5].

மேற்கோள்கள்[தொகு]

 1. Kam-Piu Ho, Wing-Leung Wong, Kin-Ming Lam, Cheuk-Piu Lai, Tak Hang Chan und Kwok-Yin Wong (2008-09-08). "A Simple and Effective Catalytic System for Epoxidation of Aliphatic Terminal Alkenes with Manganese(II) as the Catalyst". Chemistry: A European Journal 14 (26): 7988–7996. doi:10.1002/chem.200800759. 
 2. 2.0 2.1 Kh. M. Alimardanov, O. A. Sadygov, N. I. Garibov und M. Ya. Abdullaeva (2012-11-07). "Liquid-phase synthesis of cyclic diene diepoxides using metal halides and hydrogen peroxide". Russian Journal of Organic Chemistry 48 (10): 1302–1308. doi:10.1134/S1070428012100077. 
 3. L. A. Mukhamedova, G. Kh. Gil'manova, M. I. Kudryavtseva, F. G. Nasybullina und A. S. Kireeva (July 1982). "Synthesis and testing of the antiviral activity of epoxy and triazo derivatives of cyclohexane". Pharmaceutical Chemistry Journal 16 (7): 510–514. doi:10.1007/BF00761540. 
 4. 4.0 4.1 4.2 Record of CAS RN 106-87-6 in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health, accessed on 24. März 2015.
 5. 5.0 5.1 5.2 5.3 Pham, Ha Q.; Marks, Maurice J.. "Epoxy Resins". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a09_547.pub2. 
 6. வார்ப்புரு:Patent
 7. Kappeler, Connie J.; Hoyer, Patricia B. (2012-02-01). "4-vinylcyclohexene diepoxide: a model chemical for ovotoxicity". Systems Biology in Reproductive Medicine 58 (1): 57–62. doi:10.3109/19396368.2011.648820. பன்னாட்டுத் தர தொடர் எண்:1939-6376. பப்மெட்:22239082. 
 8. Takai, Yasushi; Canning, Jacqueline; Perez, Gloria I.; Pru, James K.; Schlezinger, Jennifer J.; Sherr, David H.; Kolesnick, Richard N.; Yuan, Junying et al. (2003-01-01). "Bax, caspase-2, and caspase-3 are required for ovarian follicle loss caused by 4-vinylcyclohexene diepoxide exposure of female mice in vivo". Endocrinology 144 (1): 69–74. doi:10.1210/en.2002-220814. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-7227. பப்மெட்:12488331. 
 9. Hoyer, P. B.; Devine, P. J.; Hu, X.; Thompson, K. E.; Sipes, I. G. (2001-02-01). "Ovarian toxicity of 4-vinylcyclohexene diepoxide: a mechanistic model". Toxicologic Pathology 29 (1): 91–99. பன்னாட்டுத் தர தொடர் எண்:0192-6233. பப்மெட்:11215690. 
 10. Hoyer PB1, Devine PJ, Hu X, Thompson KE, Sipes IG (Jan–Feb 2001). "Ovarian toxicity of 4-vinylcyclohexene diepoxide: a mechanistic model". Toxicol Pathol. 29 (1): 91-99.