வித்யா ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யா ஷா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்வித்யா சுப்ரமணியம்
தொழில்(கள்)பாட்டு

வித்யா ஷா (Vidya Shah) ஒரு இந்திய பாடகியும், இசைக்கலைஞரும், சமூக ஆர்வலரும் மற்றும் எழுத்தாளருமாவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வித்யாவின் குடும்பத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இசை பின்னணி இருந்தது. வட இந்திய பாணியிலான பாரம்பரிய இசையை இவர் விரும்பியதாலும், அதை வெளிப்படுத்தியதாலும், இந்த பாணி குரல் இசையில் ஒரு பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தார். கயல் கயாகியில் இசை ஐகான் சுபா முட்கலின் கீழும், மற்றும் தும்ரி, தாத்ரா மற்றும் கசல் ஆகியவற்றை சாந்தி ஹிரானந்த் என்பவரிடமும் பயிற்சி பெற்றுள்ளார். வித்யா ஷா இந்துஸ்தானி இசையில் நன்கு பயிற்சி பெற்றவராவார்.

தொழில்[தொகு]

சக்மத்துக்காக வித்யா நிகழ்த்துகிறார். 2011 சனவரி, புது தில்லி.

வித்யா ஷா தனது 12 வயதில் தென்னிந்திய பாரம்பரிய கருநாடக இசையைக் கற்கத் தொடங்கியதும், ஒரு இளம் கருநாடக பாடகராக இசை உலகில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் கர்நாடக இசையில் பயிற்சியளிக்கப்பட்ட வித்யா ஷா பின்னர் காயலில் சுபா முட்கலிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்றார். மேலும் சாந்தி ஹிரானந்திடமிருந்து தும்ரி, தாத்ரா மற்றும் கஜல் கயாகி ஆகியவற்றையும் கற்றுக்கொண்டார் கியால் கயாகியில் தனது குருவின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சியின்போது சூஃபி மற்றும் பக்தி இசை ஆகியவற்றிலும் சிறந்த திறனைப் பெற்றார். மேற்கு மத்திய பிரதேசத்தில் ஒரு பழங்குடிப் பகுதியில் இவர் தங்கியிருந்த சிறுது காலம் பழங்குடி இசையிலும் பரிசோதனை செய்தார். மேலும் நாட்டுப்புற இசையில் ஒரு சிறப்பான செயல்திறனை உருவாக்கினார்.

தொலைக்காட்சி, வானொலி, சுயாதீன திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் தவிர, இவர் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச மன்றங்களில் தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மேலும், சர்வதேச தளங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரது சர்வதேச தளங்களில் அலெக்சாண்டர் வான் அறக்கட்டளையின் ஹம்போல்ட் மன்றம், பெர்லினில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நிறுவனம், சிங்கப்பூரில் காலா உத்சவம், கலாச்சார உறவுகளுக்கான இந்திய அமைப்பு , டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகியவையும் அடங்கும் . " தி லாஸ்ட் முகல் " என்ற தனது இசை நிகழ்ச்சியில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒலிபரப்பாளர் வில்லியம் தால்ரிம்பில் என்பவருடன் இணைந்து நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். 2009ஆம் ஆண்டில், கிராமபோன் சகாப்தத்தில் பெண்களின் இசையைக் கொண்டாடும் இரண்டு நாள் கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியான 'வுமன் ஆன் ரெக்கார்ட்' என்பதை இவர் இயக்கியுள்ளார். 2014ஆம் ஆண்டில், "வுமன் ஆன் ரெக்கார்ட்" என்ற நிறுவனத்தின் இயக்குநராக ஷா இருந்தார். தெற்காசியா அறக்கட்டளையின் கலாச்சாரக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.

சமூகப் பணி[தொகு]

புரோகிராம் ஃபெலோ மற்றும் இந்தோ-ஜெர்மன் சமூக சேவை திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து 1991 சனவரியில் சமூகப் பிரச்சினைகளில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அவர் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜாபூவா மாவட்டத்தில் கெதுட் மஜ்தூர் சேத்னா சங்காதன் (விவசாயத் தொழிலாளர்களுக்கான உரிமைகள் சார்ந்த தொழிற்சங்கம்) என்ற அமைப்புடன் ஆர்வலராக பணியாற்றினார். இவர் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பில் ஆராய்ச்சி அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

வித்யா ஷா வடிவமைப்பாளரும் மற்றும் புகைப்படக் கலைஞருமான பார்த்திவ் ஷா என்பவரை மணந்தார். [1] இவர்களுக்கு அனந்த் என்ற ஒரு மகனும் மற்றும் அந்தாரா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

  1. Tripathi, Shailaja (June 16, 2011). "Show cause, will travel". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/show-cause-will-travel/article2108006.ece. பார்த்த நாள்: January 9, 2016. 

மேலும் படிக்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வித்யா ஷா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_ஷா&oldid=3316716" இலிருந்து மீள்விக்கப்பட்டது