விதை சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விதைச்சோதனை (Seed testing) என்பது ஆய்வு நோக்கங்களுக்காக அல்லது விதை சேமிப்பு நுட்பங்கள் செயல்படுகின்றனவா உள்ளிட்ட பல நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றன. மிகவும் பொதுவாக நான்கு சோதனைகள் உள்ளன. கீழே பட்டியலிடப்பட்டுள்ள முதல் இரண்டும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பொதுவானது.

வணிக ரீதியாக விற்கப்படும் விதைகளுக்கு, இந்த நான்கு சோதனைகள் பயிற்சி பெற்ற மற்றும் வழக்கமாக சான்றளிக்கப்பட்ட ஆய்வாளர்களால் பிரத்யோகமான ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படுகின்றன. விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தை மதிப்பிடுவதற்கானவையாக சோதனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.[1]

  • முளைப்பு சோதனை: முளைக்கும் விதைகளின் விழுக்காட்டை அறிய பயன்படுத்தப்படுகிறது. வணிக நிறுவனங்களில், சோதனைகள் பொதுவாக 200 அல்லது 400 விதை மாதிரிகளில் செய்யப்படுகின்றன.
  • விதை நம்பகதன்மை சோதனை இது மூன்று பகுதிகளை கொண்டது.
    • 1 முன்நிபந்தனை (உள்ளீர்த்தல்)
    • 2. ஆயத்தம் மற்றும் சாயமேற்றல் (சில நேரங்களில் விதையை வெட்டி, பின்னர் விதையை 2,3,5 டிரிபெனைல் டெட்ராசோலியம் குளோரைடு கரைசலில் ஊறவைத்தல்)
      • டெட்ராசோலிம் குளோரைடு விதை சோதனை: டெட்ராசோலியம் குளோரைடு (TZ) சோதனை பெரும்பாலும் விரைவான முளைப்பு சோதனை என்று அழைக்கப்படுகிறது. இந்த சோதனை விதையின் நம்பகத்தன்மையை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயன சோதனையாகும். மேலும் இதன் முடிவுகள் பொதுவாக 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கிடைக்கும்.
      • முளைப்பு சோதனையிலிருந்து டெட்ராசோலியம் குளோரைடு விதை சோதனை எவ்வாறு வேறுபடுகிறது? டெட்ராசோலியம் குளோரைடு சோதனையானது விதை நம்பகத்தன்மையின் துவக்க மற்றும் விரைவான நிழற்பட நொடிப்பெடுப்பை வழங்குகிறது. ஆனால் இது மிகவும் விரிவான விதை முளைப்பு சோதனைக்கு மாற்று என்று சொல்வதற்கு இல்லை. கனடாவில், டெட்ராசோலியம் குளோரைடு சோதனையானது CFIA ஆல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்காவில், டெட்ராசோலியம் குளோரைடு சோதனையை முளைப்பு சோதனைக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம், இருப்பினும் அதன் தொடர்ச்சியாக முளைப்பு சோதனை பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.
      • ஏன் டெட்ராசோலியம் குளோரைடு விதை சோதனை செய்ய வேண்டும்?
        • டெட்ராசோலியம் குளோரைடு சோதனையின் நன்மைகள்:
        • விதை நம்பகத்தன்மை குறித்த விரைவான மதிப்பீடு.
        • முளைப்பு சோதனைகளில் விதைகளின் பலவீனம் வெளிப்படுவதற்கு முன்பே அவற்றைக் கண்டறியலாம்.
        • தரக் கட்டுப்பாட்டு திட்டமிடல்களில் சரியான நேரத்தில் வழிகாட்டுதல் குடைக்கும்.
      • டெட்ராசோலியம் குளோரைடு விதை சோதனை சோதனையின் தீமைகள்
        • சிறப்பு பயிற்சியும், அனுபவமும் தேவை.
        • முளைப்பு சோதனையை விட இந்த சோதனையானது பொதுவாக மிகவும் உழைப்பு தேவைப்படக்கூடியதும், கடினமானதாகும்.
        • இந்த சோதனையின் முடிவுகள் பூஞ்சை தொற்று அல்லது இரசாயன சேதத்தை பிரதிபலிப்பதில்லை.
        • இந்த சோதனையின் முடிவுகளில் விதைத் துயில் நிலையை பிரதிபலிப்பதில்லை.
    • 3. மதிப்பீடு (வித்தை முளையத்தில் நிற மாற்றத்திற்கான ஆய்வு செய்தல்).
    • தூய்மை சோதனை: பொருள் விவரச் சீட்டில் விவரிக்கப்பட்ட விதை அளவுக்கு உண்மையில் விதைகள் உள்ளனவா என காணுதல்.
    • களை சோதனை: விதை மாதிரியை ஆய்வு செய்து, பொருள் விவரச் சீட்டில் விவரிக்கப்பட்ட விதை வகையிலிருந்து வேறுபட்ட ஒவ்வொரு விதையையும் அடையாளம் காணுதல்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விதை_சோதனை&oldid=3910836" இலிருந்து மீள்விக்கப்பட்டது