உள்ளடக்கத்துக்குச் செல்

விண்டோஸ் லைவ் வினாக்களும் விடைகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விண்டோஸ் லைவ் வினாக்களும் விடைகளும் (Windows Live QnA) மைக்ரோசாப்டின் விண்டோஸ் லைவ் சேவைகளில் ஒன்றாகும். கூகிள் விடைகள் உடன் ஒப்பிடக்கூடியதெனினும் அதனில் இருந்து மாறுபட்டது. இதன் பிரதான போட்டியாளராக யாகூ விடைகளே இருக்குமேன எதிர்பார்க்கப் படுகின்றது.

சமூகத்தில் எவருமே வினாக்களை எழுப்பலாம் இவ்வினாக்கள் தனி ஒரு ஆராய்ச்சியாளரிடம் இல்லாமல் ஒரு சமூகத்திடம் விடப்படுகின்றது அதில் தன்னார்வலர்கள் விடைகளை அளிப்பார்கள். கூகிள் விடைகளைப் போன்றல்லாது இங்கே பணரீதியாக தொடர்பு எதுவும் கிடையாது. இங்கே அளிக்கப்படும் விடைகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பார்கள். நன்றாக விடையளிப்பவர்களிற்குப் பரிசளிக்கும் சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.

விண்டோஸ் லைவ் தேடலுடன் ஒன்றிணைக்கப் படும் சாத்தியக்கூறுகள் இருப்பினும் இவ்விரண்டு சேவைகளிற்கும் இறுதித்திகதி இன்னமும் அறிவிக்கப் படவில்லை.

இச்சேவையானது தற்போது வெள்ளேட்டத்திலேயே உள்ளது (பீட்டா - beta).

வெளியிணைப்புக்கள்[தொகு]