விண்கலத் திசைவைப்புக் கட்டுப்பாடு
விண்கலத் திசைவைப்புக் கட்டுப்பாடு (Spacecraft attitude control) என்பது ஒரு விண்கலத்தின் ( ஊர்தியின் அல்லது செயற்கைக்கோளின்) ஓர் உறழ்வுச் சட்டகத்த்தை அல்லது வான கோளம் அல்லது சில புலங்கள் அல்லது அண்மைப் பொருள் போன்ற ஓர் உறுப்படியைச் சார்ந்த திசைவைப்பைக் கட்டுப்படுத்தும் செயல்முறையாகும்.
ஊர்தியின் திசைவைப்பைக் கட்டுப்படுதலுக்கு, ஊர்தியின் திசைநிலையை அளவிடுவதற்கு உணரிகள் தேவைப்படுகின்றன; தேவப்படும் திசைவைப்புக்கு ஊர்தியைத் திருப்பும் திருக்கத்தை அளிக்கவல்ல செயற்படுத்திகள் தேவைப்படுகிறன. மேலும், தற்போதைய திசைநிலையின் உணரி அளவீடுகள், தேவைப்படும் திசைநிலையின் விவரம் ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படுத்திகளுக்கு கட்டளையிட கணினி வழிநிரல்கள் தேவைப்படுகின்றன. இந்தவகை உணரிகள்,செயற்படுத்திகள், வழிநிரல்கள் ஆகியவற்றைப் படிக்கும் ஒருங்கிணைந்த புலமே வழிகாட்டுதல், கலஞ்செலுத்தல், கட்டுப்பாட்டுப் புலம் எனப்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]- நெடுக்குவாட்ட நிலையியல் நிலைப்பு
- திசை நிலைப்பு
- எதிர்வினைக் கட்டுப்பாட்டு அமைப்பு
- திசைமாற்றம் (விண்கலம்)