திசைமாற்றம் (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு விண்கலத்தின் திசைவைப்பு என்பது ஒரு தளம் அல்லது புவி , சூரியன், அல்லது ஒரு வான்பொருள் அல்லது விண்வெளியில் உள்ள பிற புள்ளியில் இருந்துள்ள திசைநிலையைக் குறிக்கும். ஒரு விண்கலம் குறிப்பிட்ட அந்தத் திசைவைப்புக்கு மாறும்போது அது திசைமாறுகிறது என்பர்.[1][2][3]

விண்வெளிப் பயணத்தின் போது , ஒரு விண்கலத்தின் நோக்கத்தைப் பொறுத்து சில காரணங்களுக்காக, அந்த விண்கலத்தின் திசைவைப்பைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒரு விண்கலத்தின் சரியான திசைவைப்பு புவியை நோக்கி இருத்தலை உறுதி செய்வது, அதன் உணர்சட்டத் தரவையும் கட்டளைகளையும் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் இன்றியமையாதது ஆகும். கூடுதலாக , பல விண்கலத் திசைவைப்பில் தங்கள் சூரியப் பலக அணிகளை சூரியனை நோக்கி உகந்த கோணத்தில் வைத்திருப்பது அவற்றின் ஆற்றல் உறிஞ்சுதலை மேம்படுத்தி, விண்கலம் அகமின் வழங்கல் அமைப்புகளினை நம்பி இருத்தலை குறைக்கிறது. ஒரு விண்கலத்தையும் அதன் துணை அமைப்புகளையும் வெப்பமாக்கல், குளிரூட்டல் நிகழ்வை கலத்தின் திசைவைப்பை மாற்றிக் கட்டுப்படுத்தலாம்.விண்கலத்தின் மீது ஓர் இருப்பில் பொருத்தப்பட்டிருக்கும் ஒளிப்பட, உணர்திறன் கருவிகளுக்குக் கலத்தின் திசைவைப்பை மாற்றுவது தேவைப்படும். விண்கலத்தின் சரியான திசைவைப்பைப் பேண, ஒரு விண்கலத்தை சுழற்சி முறையால் நிலைப்படுத்தலாம் அல்லது மூவச்சு முறையால் நிலைப்படுத்தலாம்.[4]

சுழற்சி நிலைப்படுத்தப்பட்ட விண்கலத்திற்கு , அதன் சுழற்சி வீதத்தைச் சரிசெய்ய, அதன் சுழற்சிக்கு ஒத்த திசையில் அல்லது எதிர்திசையில் ஒரு உந்துபொறியை இயக்கி, விண்கலத்திற்கு ஒரு கணிசமான திருக்கத்தைத்( torque) தந்து திசைவைப்பு மாற்றப்படுகிறது.[5] இது ஒரு முன்கூட்டிய திசைமாற்றத்திற்கு வழிவகுக்கிறது , எனவே இந்த வகையான விண்கலத்திற்கான திசை மாற்றங்கள் " முன்கூட்டிய திசைமாற்ற நடவடிக்கை " எனப்படுகின்றன.

மூவச்சு நிலைப்படுத்தப்பட்ட விண்கலத்தின் திசைமாற்றம் ஒரு மூடிய கண்ணிமுறையில் அமைகிறது. பொதுவாக உணரி அளவீடுகளின் அடிப்படையில் விண்கலத்தின் திசைவைப்பைப் பேணும் அல்லது மாற்றும் மூடிய கண்ணிக் கட்டுப்பாடு உந்துபொறிகளால் அல்லது மின்னியக்க எதிர்வினை சக்கரங்களால் நிகழ்த்தப்படுகிறது. பொதுவான ஒரு எடுத்துகாட்டக விண்வெளி தொலைநோக்கியைக் கூறலாம் , இது ஒரு புதிய வான்பொருளை நோக்கீடு செய்ய திசைதிருப்பப்பட வேண்டும். ஆனால் மூவச்சு நிலைப்படுத்தப்பட்ட விண்கலத்தின், இயல்பான திசைவைப்பு நிலையான முறையில் சரி செய்யப்படாத நிலையில், அது வேறொரு வழியில் மாற்றப்பட்டாலும் விண்கலம் ஒரு திசைமாற்றத்தைஆடையும். இந்தத் திசைமாற்றம், அடிப்படை திசைவைப்புக் கட்டுப்பாட்டு பயன்முறையில் உள்ள விகித்தத்தை விட வேறொரு விகிதத்தில் அமையும். இதற்கு நல்ல எடுத்துகாட்டு மாகெல்லன் வெள்ளி ஆய்கலனாகும். மாகெல்லன் ஆய்கலம் ஒவ்வொரு வட்டணைக்கும் ஒருமுறை வெள்ளி மேற்பரப்பின் அலகீட்டைக் குறுக்கிட்டு, ஒரு பெரிய திசைதிருப்பத்தை உருவாக்கி, அதன் உயர் ஈட்ட உணர்சட்டத்தின் தரவு பரிமாற்றந்தைப் புவிக்கு அனுப்பியது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PIA14805: A Sideways Glance". Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 2012-01-01.
  2. "Tycho Central Peak Spectacular!". NASA's Lunar Science Institute. பார்க்கப்பட்ட நாள் 2012-01-01.
  3. "GCN GRB Observation Report". NASA's Goddard Space Flight Center. பார்க்கப்பட்ட நாள் 2012-01-01.
  4. "Basics of Space Flight: Section II". Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 2012-01-01.
  5. "Dictionary of Technical Terms for Space". NASA's Software, Robotics and Simulation Division. பார்க்கப்பட்ட நாள் 2012-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திசைமாற்றம்_(விண்கலம்)&oldid=3784751" இலிருந்து மீள்விக்கப்பட்டது