விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழீழ விடுதலைப் புலிகள் பலாத்கார ஆள்சேர்ப்பில் ஈடுபட்டிருப்பதாக பிபிசி ஜூலை 30, 2007 இல் செய்தி வெளியிட்டுள்ளது[1]. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நபர் கட்டாயமாகப் புலிகளுடன் இணைய வேண்டும் என்று புலிகள் கொள்கை (அல்லது சட்டம்) ஆக்கியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரும் புலிகளில் இல்லாத குடும்பங்களில் ஒருவரை பலாத்காரமாகப் புலிகள் தமது அமைப்பில் சேர்த்து வருவதற்கு தகுந்த புதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேற்கண்ட செய்தி குறித்துள்ளது.

இருப்பினும், புலிகளின் அரசியல் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் இதை மறுத்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1980 இறுதியில் பிற இயக்கங்கள் கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்ட பொழுது, விடுதலைப் புலிகள் அதை அப்பொழுது எதிர்த்து பரப்புரை செய்ததும்[மேற்கோள் தேவை], இலங்கை இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. By Roland Buerk. "Tamil Tiger 'forced recruitment'" http://news.bbc.co.uk/2/hi/south_asia/6916291.stm 30 July 2007