விஜய் குமார் பட்டோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Vijay Kumar Patodi
பிறப்பு மார்ச்சு 12, 1945(1945-03-12)
முக்குணங்கள், British India (now மத்தியப் பிரதேசம், இந்தியா)
இறப்பு21 திசம்பர் 1976(1976-12-21) (அகவை 31)
மும்பை, மகாராட்டிரம்
தேசியம்Indian
Alma materபனாரசு இந்து பல்கலைக்கழகம்
மும்பை பல்கலைக்கழகம்
Institute for Advanced Study
துறை ஆலோசகர்எம்.எஸ்.நரசிம்மன்
S. Ramanan

விஜய் குமார் பட்டோடி (12 மார்ச் 1945 - 21 டிசம்பர் 1976) ஓா் இந்திய கணிதவியலாளா். இவர் வேற்றுமைப்பாட்டு வடிவக் கணிதம் மற்றும்

இடவியல் தொடர்பான அடிப்படை பங்களிப்புகளை செய்தார். அவர் எலிப்டிக் ஆபரேட்டர்களுக்கான இன்டெக்ஸ் தேற்றத்தின் நிரூபணத்திற்கு வெப்ப சமன்பாடு முறைகளைப் பயன்படுத்திய முதல் கணிதவியலாளராக இருந்தார். [சான்று தேவை] அவர் மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் பன்டெமெண்டல் ரிசர்ச், இன் பேராசிரியராக இருந்தார். [சான்று தேவை]

கல்வி[தொகு]

பட்டோடி மத்தியப் பிரதேசத்தின் குணா அரசு உயர்நிலைப் பள்ளியின், , மாணவராவாா். உஜ்ஜெயினில் உள் விக்ரம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார், பெனராஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றாா், மும்பை பல்கலைக்கழகத்தில் எம். எஸ். நரசிம்மன் மற்றும் எஸ். ரமணன் ஆகியோாின் மேற்பாா்வையில் தனது Ph.D. பட்டத்தை முடித்தாா்..[1]

அவா் தனது ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்து “Curvature and Eigenforms of the Laplace Operator" (Journal of Differential Geometry), மற்றும் "An Analytical Proof of the Riemann-Roch-Hirzebruch Formula for Kaehler Manifolds" (also Journal of Differential Geometry), என்ற இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமா்ப்பித்து புகழ் பெற்றாா். .[2]

ஆய்வுப் பணி[தொகு]

அவர் 1971-1973 ஆம் ஆண்டு நியூ ஜெர்ஸியிலுள்ள பிரின்ஸ்டன் Institute for Advanced Study இல் பணியாற்ற அழைக்கப்பட்டாா். அங்கு அவர் மைக்கேல் அதியா, இசதோர் சிங்கர் மற்றும் ரவ்ல் பாட் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். கூட்டுப் பணியின் விளைவாக அவா்கள் தொடர்ச்சியாக, "Spectral Asymmetry and Riemannian Geometry" (Math. Proc. Cambridge. Phil. Soc.) ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்தனா். அக்கட்டுரைகளில் η-மாறிலி வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது 1980 களில் இப்பிராந்தியத்தில் அடுத்தடுத்த முன்னேற்றங்களில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.[3]

30 வயதில் டாடா இன்ஸ்டிடியூட்டில் முழு நேரப் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டார், எனினும் அவர் 31 ஆவது வயதில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முந்தைய சிக்கல்கள் காரணமாக இறந்தார்.

மேற்கோள் நுால்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

  • O'Connor, John J.; Robertson, Edmund F., "விஜய் குமார் பட்டோடி", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • விஜய் குமார் பட்டோடி at the Mathematics Genealogy ProjectMathematics Genealogy Project
  • Concise Biography
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_குமார்_பட்டோடி&oldid=2721631" இருந்து மீள்விக்கப்பட்டது