விசுவேமா அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசுவேமா அரங்கம்
Viswema Hall
பொதுவான தகவல்கள்
வகைபல்நோக்கு அரங்கம்
முகவரிசுவே-பா, விசுவேமா, நாகலாந்து
திறக்கப்பட்டதுகட்டுமானத்தில்
பிற தகவல்கள்
இருக்கை திறன்3200–5000

விசுவேமா அரங்கம் (Viswema Hall) என்பது இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் விசுவேமா கிராமத்திலுள்ள சுவே-பா பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒரு பல்நோக்கு அரங்கமாகும் . அரங்கத்தின் கட்டுமானம் 2020 ஆம் ஆண்டில் தொடங்கியது. கட்டப்பட்டு முடிந்ததும் இந்த அரங்கம் மாநிலத்திலேயே இந்தவகையில் கட்டப்பட்ட முதலாவது அரங்கமாகத் திகழும். அரங்கில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், கூட்டங்கள் போன்றவற்றை நடத்த முடியும்.[1]

அரங்கம்[தொகு]

அரங்கில் ஒரு பல்நோக்கு மண்டபம் 200 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருக்கும் விளையாட்டு நிகழ்வுகளின் போது 3200 நபர்களுக்கும், சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளின் போது சுமார் 5000 நபர்களும் அமர்ந்து இரசிக்க அரங்கம் இடமளிக்கும். இது உள்ளூர் சமூக மையமாகவும் செயல்படும். [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவேமா_அரங்கம்&oldid=3831862" இருந்து மீள்விக்கப்பட்டது