உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிரமவர்தனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிரமவர்தனன்
மயபாகித் பேரரசன்
ஆட்சிமயபாகித் பேரரசு: 1389-1429
முன்னிருந்தவர்ஹயாம் வுரூக்
பின்வந்தவர்சுகித்தா
அரசிகுசுமவர்தனி
அரச குலம்இராயச வம்சம்
பிறப்புமயபாகித் பேரரசு
இறப்பு1429
சமயம்சைவம்

விக்கிரமவர்தனன் (Wikramawardhana) சாவக மன்னரும், கயாம் வுரூக்கிற்குப் பின்னர் மயாபாகித்து பேரரசின் 5வது மன்னராக 1389 முதல் 1429 வரை பதவியில் இருந்தவர். இவர் 4-வது மன்னர் கயாம் வுரூக்கின் மருமகனும், அவரது மகளும் இளவரசியுமான குசுமவர்தனியைத் திருமணம் புரிந்தவரும் ஆவார்.[1] கயாம் வுரூக்கின் இன்னும் ஒரு மகனான பிரே வீரபூமி என்பவன் விக்கிரமவர்தனனினதும் குசுமவர்தனியினதும் ஆட்சிக்கு எதிராக சவால் விடுத்தான். தானே கயாம் வுரூக்கின் ஒரேயொரு மகன் எனவும், தானே அவரது முடிக்குரிய வாரிசு எனவும் வாதாடினான். ஆனாலும், வீரபூமியின் தாய் கயாம் வுரூக்கின் சட்டபூர்வமான மனைவி அல்லாத காரணத்தாலும், அவள் ஒரு இற்பரத்தை என்பதாலும் வீரபூமி சட்டபூர்வமாக வாரிசாக அறிவிக்கப்படவில்லை. இவர்களுக்கிடையே வாரிசுரிமைப் போர் 1404 முதல் 1406 வரை நடைபெற்றது. இப்போரில் விக்கிரமவர்தனன் வெற்றி பெற்றாலும் இந்த உள்நாட்டுப் போர் மயாபாகித்துப் பேரரசை நலிவடையச் செய்தது. விக்கிரமவர்தனனின் ஆட்சி 1429 வரை நடந்தது, அவருக்குப் பின்னர் அவரது மகள் சுகித்தா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cœdès, George (1968). Vella, Walter F. (ed.). The Indianized States of Southeast Asia. Translated by Brown Cowing, Sue. Honolulu: University of Hawaii Press. p. 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.
  • Pringle, Robert. A Short History of Bali: Indonesia's Hindu Realm. Crows Nest, NSW: Allan & Unwin, 2004.
முன்னர் மயாபாகித்து பேரரசு
1389–1429
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிரமவர்தனன்&oldid=2759831" இலிருந்து மீள்விக்கப்பட்டது