விக்கிப்பீடியா பேச்சு:Request for Comments/ULS typing tool

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய தட்டச்சுக் கருவியில் காணும் வழுக்களைப்பற்றிய தகவலை இங்கு பதியுங்கள். அவை குறித்து வழு அறிக்கைகள் தந்து சரி செய்யப் பார்ப்போம். பிரச்சினை தொடர்ந்தால் மேல் நடவடிக்கை என்ன என்று பார்ப்போம். மலையாள விக்சனரியில் பழைய தட்டச்சுக் கருவியைத் தரச் சொல்லிக் கேட்டுள்ளார்கள். இது குறித்த வழு அறிக்கையைக் காணலாம்.

வழு பதியும் போது பின்வரும் விவரங்களைத் தாருங்கள்:

  • எந்த இயக்குதளம், கருவி (கணினி, iPhone, iPad போன்று), எந்த உலாவி, அவற்றின் பதிப்பு விவரங்கள்.
  • புகுபதிந்து உள்ளீர்களா? incognito / private browsing செய்கிறீர்களா?
  • எல்லா பக்கங்களிலும் பிரச்சினையா குறிப்பிட்ட பக்கத்தில் மட்டுமா? தொடர்புடைய பக்க முகவரிகள் தாருங்கள்.
  • இதே பிரச்சினை எல்லா கணினியிலும் வருகிறதா? உங்கள் உலாவியில் விக்கிப்பீடியா தொடர்புடைய cookieகளை நீக்கி விட்டு மீண்டும் முயன்று பாருங்கள்.

ஏனெனில், வழு பதியப் போனால் இது போன்ற அனைத்துத் தகவலையும் கேட்பார்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 11:15, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

Issues in showing the Typing Combo Box[தொகு]

  • Some of the combo box items disappear into the screen (IE).
  • The typing tool needs to be prominenantly displayed (ex in the Header, bigger buttons?)
  • A global option is needed to enable it for all text boxes.

--Natkeeran (பேச்சு) 12:33, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

//* Some of the combo box items disappear into the screen (IE).//

இதற்கான திரைக்காட்சியை இணைக்க முடியுமா?

//* A global option is needed to enable it for all text boxes.//

எந்தெந்த உரைப்பெட்டிகளில் இப்போது வர மாட்டேன் என்கிறது. இன்னும் கூடுதல் தகவல் தேவை.

//* The typing tool needs to be prominenantly displayed (ex in the Header, bigger buttons?)// இது தொடர்பாக ஏற்கனவே வழு பதிந்து பார்த்து விட்டோம். பயனர் சோதனைகளின் அடிப்படையில் தற்போது உள்ள வடிவமைப்பு செய்யப்பட்டதாகவும் இதனை மாற்ற முடியாது என்றும் கூறி விட்டார்கள்.--இரவி (பேச்சு) 07:21, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

ctrl+m அவ்வப்போது வேலை செய்வதில்லை[தொகு]

ctrl+m அவ்வப்போது வேலை செய்வதில்லை. ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப சொடுக்கி கொண்டு தட்டச்சு முறையைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

உபுண்டு இயக்குதளம். குரோம் உலாவி. புகுபதிந்துள்ளேன். ஒரே உலாவல் அமர்விலும், ஒரே உலாவிச் சாளரத்திலும் கூட இப்பிரச்சினை வருகிறேன். இதே பிரச்சினையை வேறு சில இயக்குதள / உலாவிச் சூழல்களிலும் கண்டு வருகிறேன். வழு பதிந்துள்ளேன்.--இரவி (பேச்சு) 07:19, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]