விக்கிப்பீடியா பேச்சு:பங்களிப்பாளர் அறிமுகம்/மயூரநாதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரநாதனைத் தமிழ் விக்கிப்பீடியா முன்னோடி எனக் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாகத் தேவையற்ற அடைமொழிகளை நான் தவிர்க்க விரும்புவேன். ஆனால், இது முற்றிலும் பொருத்தமான, சற்றும் மிகையில்லாத, சான்றுகளுடன் நிறுவக்கூடிய செய்தி. இதை ஏற்றுக் கொள்ளும்படி மயூரநாதனை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் தொடக்க நாள் பங்களிப்புகள் இல்லாவிட்டால் இன்று இந்தத் தளமே இருந்திருக்குமோ என்னவோ? -- சுந்தர் \பேச்சு 05:47, 19 ஜூன் 2010 (UTC)

நூற்றுக்கு நூறு உண்மை. வழிமொழிகிறேன். முன்னோடி மட்டும் அல்ல, பல துறைகளில் இன்றளவும் யாவரைக்காட்டிலும் கூடுதலான கட்டுரைகள் எழுதியவர். எதெதெல்லாம் முக்கியமானதோ அவற்றை எல்லாம் தேர்ந்து கட்டுரைகள் எழுதி வளம் சேர்த்தவர், சேர்த்துக்கொண்டிருப்பவர். --செல்வா 06:19, 19 ஜூன் 2010 (UTC)