விக்கிப்பீடியா பேச்சு:பங்களிப்பாளர் அறிமுகம்/செங்கைப் பொதுவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருந்தகையீர் வணக்கம் தங்களின் விருப்பப்படி சில சொல் கூறியுள்ளேன். தகுதி அறிந்து தங்கள் நோக்கில் திருத்திக்கொள்ளுங்கள். அல்லது விட்டுவிடுங்கள். விக்கியில் தமிழ் வளர அயராது உழைப்பேன்.--Sengai Podhuvan 00:45, 19 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

  • இந்த அறிமுகத்தின் தொடக்கத்தில் செங்கை பொதுவன் ஒரு ஓய்வு பெற்ற தமிழ் அறிஞர் என்றிருக்கிறது. இந்த வாக்கியம் தவறு என நான் கருதுகிறேன். இங்கு செங்கை பொதுவன் பள்ளியில்/கல்லூரியில், ஆசிரியராக/பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ் அறிஞர் என்றிருக்க வேண்டும். எது பொருத்தமானதோ (பள்ளி அல்லது கல்லூரி மற்றும் ஆசிரியராக அல்லது பேராசிரியராக )அதைச் சேர்த்து வாக்கியத்தை முழுமைப்படுத்தவும்.--தேனி.எம்.சுப்பிரமணி. 17:26, 19 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

பெருந்தகையீர் வணக்கம். அறிமுகப் பகுதியில் என்னையும் பொருட்படுத்தி இணைத்துக்கொண்டமைக்கு நன்றி. ரவி அமைத்துள்ள அறிமுக உரை மிகச் சிறப்பாக உள்ளது. எனினும் தேனி நண்பர் கூறியது போல் இருந்தால் நலம். என் கட்டுரைகளில் வரும் விலங்குகள், செடியினங்கள் பற்றிய விளக்கங்களுக்கு அடிப்படை என் வாலிய பருவத்தில் நான் தனியேர் உழவனாக வாழ்ந்து பெற்ற பட்டறிவே. எனவே தேனி நண்பர் தெளிந்து கூறுவதுபோல சற்று மாற்றிக்கொள்ளலாம். 'வாலிய பருவத்தில் தனியேர் உழவராக வாழ்ந்து, பின்னர் பள்ளி ஆசிரியராகவும், பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும், வரலாறு எழுதும் குழுவில் பதிப்பாசிரியராகவும், பருவ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்' என்று அமைத்துக்கொள்வது சிறப்பு. எண்ணிப் பாருங்கள்.--Sengai Podhuvan 21:35, 19 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

தங்கள் கருத்துக்கு ஏற்ப சிறிது மாற்றி உள்ளேன். முதற்பக்க அறிமுகத்தில் பயனரின் தனி வாழ்க்கை குறித்து மிகச் சுருக்கமாகவே கூறுவது வழக்கம். உங்கள் பயனர் பக்கத்துக்கான இணைப்பு உள்ளதால், அங்கு நீங்கள் விரிவான குறிப்புகளை இடலாம். நன்றி--இரவி 18:54, 21 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]