விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாக உதவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன், இந்த பக்கத்தை உருவாக்கியது நல்ல யோசனை. {{test}} , ({{சோதனை}}) வார்ப்புரு இடுவது, கூட்டு முயற்சிக்கட்டுரை பக்கத்தை இற்றைப்படுத்துவது, பகுக்கப் படாத பக்கங்களை பகுப்பது, மீடியாவிக்கி பக்கங்களை தமிழ் படுத்துவது, மேம்படுத்துவது (மீடியாவிக்கி பக்கங்களை நிர்வாகிகள் மட்டும் தான் தொகுக்க முடியும்)ஆகியவற்றையும் நிர்வாகப் பணிகளில் சேர்த்து அது குறித்து உதவுமாறு அனைத்துப் பயனர்களையும் கேட்டுக் கொள்ளலாம்--ரவி (பேச்சு) 17:18, 23 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

ரவி, நீங்கள் சொல்வது சரிதான். நிர்வாகிகளுக்கான பணிகளை தெளிவுபடுத்தி, ஒழுங்குபடுத்துவதன் மூலம் நாம் மேலும் சிறப்பாக இயங்கமுடியும். --Natkeeran 17:25, 23 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

புதுப்பயனர்களை வரவேற்க ஆங்கிலத்திலும் ஒன்று இருப்பின் நன்றாக இருக்கும். -- சிவகுமார் 11:44, 6 ஏப்ரல் 2006 (UTC)

நிர்வாக பணிகள்[தொகு]

திட்டமிடல் - Planning[தொகு]

  • ஆலமரத்தடி
  • ஆண்டறிக்கை

ஒழுங்கமைத்தல் - Organizing/Coordination[தொகு]

  • இன்றைப்படுத்தல்
  • நிலுவையில் உள்ள பணிகள்
  • சமூக வலைவாசல்

பராமரிப்பு/வழிநடத்தல் - Implementation/Maintenanice/Guidence[தொகு]

  • ஒத்தாசை

கட்டுப்படுத்தல் - Control[தொகு]

  • தரம் - article quality
  • stats

நிர்வாகிகள் கவனிக்கத்தக்கவை[தொகு]

  • இனி வருங்காலங்களில் நிர்வாகிகள் நகர்த்தற்பதிவுகளை அவதானித்து அவசியமற்ற வழிமாற்றிகளை நீக்கிவருமாறு பரிந்துரைக்கிறேன். குறிப்பாகப் பேச்சுப் பக்க வழிமாற்றிகள் தேவையே இல்லாதவை. பக்கங்களின் மொத்த எண்ணிக்கையும் வழிமாற்றிகளின் எண்ணிக்கையும் விக்கியின் தரத்தைச் சற்று விளக்கக் கூடியவையாதலால் பலநூற்றுக்கணக்கில் அவசியமற்ற பக்கங்கள் இருப்பதாற் பயனில்லை. நன்றி. கோபி 13:10, 30 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
  • மாற்றுமுறையில் கட்டுரை எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும்போது Articles that contain at least one internal link and 200 characters readable text, (disregarding wiki- and html codes, hidden links, etc.; also headers do not count) மட்டுமே கட்டுரைகளாகக் கருதப்படுகின்றன. சிறப்பாக அமைக்கப்படும் ஒரு விக்கிபீடியாவில் வழமைமுறை எண்ணிக்கைக்கும் மாற்றுமுறை எண்ணிக்கைக்கும் இடைவெளி குறைவாகவே இருக்கும்! தமிழில் மிகச்சிறு கட்டுரைகளை அகற்றி அல்லது விரிவாக்கி வருகிறோம். ஆதலால் இடைவெளி இன்னும் குறையும் என எதிர்பார்க்கலாம். தொடராப் பக்கங்கள் [1] இல் காணப்படும் சுமார் 150 கட்டுரைகள் விக்கி உள்ளிணைப்பு அற்றவை என்பதால் மாற்று முறையில் கட்டுரைகளாகக் கருதப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஆதலால் விக்கியாக்கத்தில் ஈடுபாடு காட்டும் பயனர்கள் தொடராப் பக்கங்கள் இற்குச் சென்று விக்கியாக்கத்திலீடுபட்டால் மாற்றுமுறை எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என நினைக்கிறேன். நன்றி. கோபி 17:25, 3 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
மிக எளிதாக திருத்தக்கூடியவை. பலவற்றை இன்று செய்துள்ளேன். பிற பயனர்களும், எளிதில் பங்குகொண்டு மாற்றி இக்குறையை நீக்கலாம். பொதுவாக ஓரிரு சொற்களுக்கு இணைப்பு தருவது மிக மிக எளிது. ஒவ்வொரு பயனரும் 10-20 கட்டுரைகளைத் திருததி்னால், ஓரிரு நாட்களில் சரி செய்து விடலாம். --C.R.Selvakumar 00:59, 9 அக்டோபர் 2006 (UTC)செல்வா[பதிலளி]