விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கியூடகக் கையேடு/மொழிநடை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயப்பாட்டு வினை பற்றி ஒரு குறிப்பு[தொகு]

கட்டுரையில் செயப்பாட்டு வினை தமிழ் மரபுக்கு ஒவ்வாதது போல கூறப்படுவது சரியல்ல. எனவே, அப்பகுதியில் சில திருத்தங்களைச் செய்துள்ளேன்.

செயப்பாட்டு வினை தமிழ் இலக்கண மரபில் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. திருக்குறளிலிருந்து சில எடுத்துக்காட்டுகள்:

வையத்து வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

(குறள் 50)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

(குறள் 131)

பாரதியார் "பகவத் கீதை" உரையில் கூறுவது:

புனர் ƒஜன்மக் கொள்கை, புலால் மறுத்தல் - இவை இரண்டுமே பௌத்த மதத்திலிருந்து †ஹிந்து மதத்துக்குள் நுழைந்த கொள்கைகளில் முக்கியமானவை என்று கருதப்படுகின்றன...இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.''

பாரதிதாசன் "தமிழச்சியின் கத்தி" என்னும் தமது படைப்பை இவ்வாறு தொடங்குகின்றார்:

தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்;

ஆர்க்காட்டுப் பகுதி அவன் ஆணைப்படி
நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது.
நுவலும் அவ் வார்க்காடு நூற்றெழுபத்திரண்டு

பாளையமாகப் பகுக்கப் பட்டது.

மேலும் 1956இல் வெளியான "இலக்கணக் கொத்து" என்னும் நூலில் சுவாமிநாத தேசிகர் செயப்பாட்டு வினையைப் பயன்படுத்தும் முறை பற்றி விளக்குகிறார்.காண்க: இலக்கணக் கொத்து, செய்யுள் 18, பக்கம் 69.--பவுல்-Paul (பேச்சு) 01:25, 17 செப்டம்பர் 2013 (UTC)