விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கியூடகக் கையேடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன், நூலின் இறுதி உரை கிடைப்பதற்கான கால இலக்கைத் தெரிவிக்க முடியுமா? எவ்வளவு விரைவாக முடிகிறதோ நல்லது. கையேடு மிக விரிவாக இருக்கும் பட்சத்தில், அச்சுக்கு என சுருக்கிய வடிவம் ஒன்று தேவைப்படும். அச்சில் 96 பக்கங்கள் வருவதை உத்தேசித்தே செலவுக் கணக்கு போட்டுள்ளோம். இது தொடர்பாக சில பதிப்பகத்தாரிடம் பேசி விட்டு இற்றைப்படுத்துகிறேன். விரிவான கையேட்டை மின்னூலாக வெளியிடலாம். நன்றி.--இரவி (பேச்சு) 17:56, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

உடனடியாகக் கூற முடியவில்லை. சற்று தொடங்கி விட்டுக் கூறுகிறோம். --Natkeeran (பேச்சு) 23:39, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நான் ஒரு துவக்கப் பத்தியை எழுதியுள்ளேன். இதுபோல் விக்கியாக்கத்துடன் எழுதப்பட வேண்டுமா அல்லது அச்சு வெளியீடு போல எழுதப்பட வேண்டுமா ? கையேடு என்றால் Brochure,Flyer போன்றதா அல்லது guide book, manual போன்று நூல் வடிவத்தில் அமைந்ததா ? விரிவான கையேட்டை உருவாக்க கூடுதல் நேரம் வேண்டியிருக்கும். இரவி முன்பு கூறிது போல விக்கிநூல்கள் தளத்தில் ஒருங்கிணைக்கலாமா ?--மணியன் (பேச்சு) 22:58, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
விக்கியாக்கத்துடன் எழுதலாம். ஆனால் இணைப்புக்களில் மேலதிக விபரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. உங்கள் அறிமுகப் பகுதி, சற்றுப் பரந்த பொது அறிமுகத் தோடு தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். எ.கா இணையத்தில் தமிழ். --Natkeeran (பேச்சு) 23:39, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
தேனி சுப்பிரமணி சுட்டியிருந்தபடி, டெமி (14 x 22 செ.மீ) 96 பக்கம் என்று அச்சிடத் தக்க வகையில் தான் செலவுக் கணக்கு போட்டுள்ளோம். இது ஒரு அச்சு வடிவிலான guide book, manual போன்றதே. படித்தால் தூக்கம் வரக்கூடாது, விரிவாகச் சொல்லி பயமுறுத்தக்கூடாது, செலவும் எகிறக்கூடாது என்ற வகையில் 96 பக்கங்கள் என்ற இலக்கு :) எனவே, இது Tamil Wikipedia for Dummies போன்று எல்லாம் சொல்லித் தரும் விரிவான நூல் அன்று. முக்கியமானவற்றைச் சுட்டி ஆர்வமூட்டி தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இழுத்து வர வேண்டும். நிற்க !
முதற்கட்டமாக, இன்று ஒரு முன்னணிப் பதிப்பகத்துடன் பேசிப் பார்த்தேன். கௌதம் பதிப்பகம் சுட்டும் அதே விலையில் 1100 படிகள் அச்சிட்டுத் தர முடியும் என்று கூறியுள்ளார்கள். அச்சிட்டுத் தர ஒரு வாரம் ஆகுமாம். எனவே, செப்டம்பர் 15க்கு முன்பாகவாவது நாம் இப்பணியை முடிக்க வேண்டும்.
இது போன்ற நூல்கள் இலவசமாக வினியோகிக்கப்படும் போது, யாரும் படிக்காமல் மூலையில் கிடப்பதைப் பார்த்திருக்கிறனே. எனவே, தொடர்ந்து இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுதல், மீள்பதிப்பு செய்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றுக்கான உற்பத்தி விலையை மட்டும் வைத்து விற்பது ஏற்புடையதாக இருக்குமா என்று அறிய விரும்புகிறேன். 500 படிகளை உரியவர்களுக்கு (விக்கிப்பீடியர்கள், நூலகங்கள் போன்று) இலவசமாக வழங்கலாம். எஞ்சியவற்றை விலை வைத்தோ நன்கொடை வேண்டியோ தரலாம்.--இரவி (பேச்சு) 13:15, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

ஒரு நினைவூட்டல்: செப்டம்பர் 15க்குள் இறுதி வரைவு கிடைத்தால் நன்றாக இருக்கும். குறைவான கால இலக்குக்கு வருந்துகிறேன்.--இரவி (பேச்சு) 06:21, 10 செப்டம்பர் 2013 (UTC)

கூடிய உதவி தேவை[தொகு]

காலம் நெருங்குவதால் தொடங்கப் பட்டாத பகுதிகளை ஏற்கனவே இருக்கும் தகவல்களைக் கொண்டு உருவாக்கித் தர அனைத்து பயனர்களும் அழைக்கப்படுகிறார்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:32, 11 செப்டம்பர் 2013 (UTC)

PDF கோப்பு வடிவில் கையேடு தேவை[தொகு]

அச்சகத்தார் PDF கோப்பு வடிவில் கையேட்டைக் கேட்கிறார்கள். எனவே, விக்கியில் எழுதும் அதே வேளை ஒரு Google word கோப்பில் இட்டு வரலாம். பங்களிப்பாளர்கள் அதில் இறுதித் திருத்தத்தை மேற்கொண்ட உடன் PDF கோப்பாக மாற்றி விடலாம். அதற்கு ஏற்றாற் போல் பங்களிப்பாளர்களிடம் அந்தக் கோப்புக்கான திருத்தும் உரிமையுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

முழுமையாக நூலை எழுதி முடித்தவுடன் இரு வடிவங்களில் கோப்பு தேவைப்படும்.

1. மின்னூல் ஆக்குவதற்கான கோப்பு - இதனை இறுதி செய்வதற்கு செப்டம்பர் 28, 29 வரை நேரம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், வடிவமைப்பு மாற்றங்களை மட்டும் செய்தால் நன்று. உரையில் மாற்றம் வேண்டாம். இது word formatல் இருந்தாலே போதும். மின்னூலாக்கும் வேலையை நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்.

2. அச்சு நூல் ஆக்குவதற்கான பதிப்பு - தற்போது விக்கி formatல் அடிக்குறிப்புகள், உள்ளிணைப்புகள் போன்றவற்றுடன் எழுதப்பட்டுள்ளது. அச்சு வடிவில் வரும் போது அதற்கான திருத்தங்களைச் செய்ய வேண்டும். இதனைச் செய்து முடித்த பிறகு, இறுதியாக ஒரு PDF கோப்பை google docல் இருந்தே உருவாக்கிக்கொள்ளலாம். --இரவி (பேச்சு) 07:54, 13 செப்டம்பர் 2013 (UTC)

Wiki formatஐ PDFல் கொண்டு வருவது எப்படி?[தொகு]

விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல் போன்ற பக்கங்களைப் பார்த்தால் இவற்றை இலகுவாக ஒற்றி ஒட்டி PDFஆக ஆக்க முடியாது என்று தோன்றுகிறது. விக்கியில் பார்ப்பது போல அப்படியே PDFஆக மாற்றுவதற்கு ஏதேனும் கருவிகள் உள்ளனவா?--இரவி (பேச்சு) 06:28, 14 செப்டம்பர் 2013 (UTC)

இரவி, இடதுபக்க கருவிப் பட்டியில் அச்சுக்குகந்தப் பதிப்பு என்பதை அழுத்தினால் விக்கி இணைப்புகள் நீக்கப்பட்டு இவ்வாறு காட்டுகிறது. இதனை PDFஆக சேமித்துக் கொள்ளலாம்.
இன்னும் சிறப்பாக ஆக்கவேண்டும் என்ற அவா இருந்தாலும் வந்துள்ள இடத்தில் எனது நேரம் என் கையில் இல்லை என்பதால் உடனடியாக உரையாடவும் விரைவாக எஞ்சியப் பகுதிகளை முடிக்கவும் இயலாதுள்ளேன். எனது இயலாமைக்கு வருந்துகிறேன்.--மணியன் (பேச்சு) 15:56, 14 செப்டம்பர் 2013 (UTC)
நேற்றே, விக்கிநூல் பக்கங்களை பி.டி.எப் ஆக மாற்றிப் பார்த்தேன், இடப்பக்க இணைப்பின் வழி!. எளிமையாக இருந்தது. ஆனால் தமிழ் எழுத்துகள் உடைந்தே தோன்றுகின்றன. :-( மாற்றூ வழி தேடவும்-தமிழ்க்குரிசில்
எனக்கு சரியாக வருகிறதே..இடதுபக்க கருவிப் பட்டை-->அச்சுக்குகந்த பதிப்பு -->Save as PDF--> விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு:கட்டுரையைத் தொகுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா.pdf--மணியன் (பேச்சு) 18:56, 14 செப்டம்பர் 2013 (UTC)

மணியன், பெரும்பகுதி கையேட்டை நீங்கள் தான் எழுதித் தந்துள்ளீர்கள். அதற்கு முதற்கண் நன்றி. அச்சுக்குகந்த பதிப்பு பக்கத்தில் இருந்து எவ்வாறு PDFஆக மாற்றுகிறீர்கள்? நீங்கள் கொடுத்துள்ள மாதிரிக் கோப்பில் கணினிக் குறியீடுகள் முதலியவைத் தெளிவாக வரவில்லை. புத்தகமாகக் கொண்டு வருவதால் தலைப்புப் பகுதியிலும் அடிப்பகுதியிலும் உள்ள குறிப்புகளை நீக்க வேண்டி இருக்கும். எனவே, நேரடியாக PDF ஆக்குவதற்குப் பதில் முதலில் ODTஆகத் தரவிறக்கு வசதியைப் பயன்படுத்தித் தொகுத்து அங்கிருந்து PDFஆக மாற்றலாம். Open Officeல் தேர்ச்சி உடைய எவரேனும் உதவ முன்வந்தால் நன்றாக இருக்கும்.--இரவி (பேச்சு) 07:00, 15 செப்டம்பர் 2013 (UTC)

நூலின் இறுதி வடிவம்[தொகு]

நூலின் இறுதி வடிவை நாம் தந்ததில் இருந்து ஒரு வார காலம் அச்சிடுவதற்குத் தேவை என்று பதிப்பகத்தில் கூறியுள்ளார்கள். இன்று இரவு (23:59 UTC) நிலவரப்படி நூலில் உள்ளடக்கங்களைச் சேர்ப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறேன். அதற்குப் பிறகு உரை திருத்தம், தேவைப்பட்டால் சுருக்கி எழுதுதல், அச்சுக்கு ஏற்ப வடிவமைத்தல் ஆகிய பணிகளுக்கு நேரம் ஒதுக்கலாம். இல்லை, இன்னும் நேரம் எடுத்துச் சிறப்பாகச் செய்யலாம் என்றால் செய்யலாம். ஆனால், சென்னைக் கூடல் நிகழ்வுக்கு நூலைக் கொண்டு வருவது சிரமமாக இருக்கும். பலரும் இந்தக் கூடலுக்கு வருவதால் இந்த நிகழ்வில் நூலை வழங்குவது பொருத்தமாகவும் இலகுவாகவும் இருக்கும். நிகழ்வில் கலந்து கொள்கிற விக்கிப்பீடியர்களும் ஆளுக்குச் சில படிகளை எடுத்துச் சென்று தங்கள் பரப்புரை முயற்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.--இரவி (பேச்சு) 06:13, 16 செப்டம்பர் 2013 (UTC)

22-23 திகதிகளை இலக்காக வைத்து செயற்படலாம். ஆனால் நேர நெருக்கடி வரும் என்றே எதிர்பாக்கிறேன். ஓரளவாவது தரமுடம் பூரணம் பெற வேண்டும். --Natkeeran (பேச்சு) 03:03, 17 செப்டம்பர் 2013 (UTC)
நற்கீரன், பதிப்பகத்தார் ஒரு வாரம் என்று கேட்டால் நாம் பத்து நாளாவது நேரம் தருவது தான் ஒத்து வரும். 20ஆம் தேதியாவது அவர்களின் கைக்கு இறுதி வடிவம் போகவில்லை என்றால் நிகழ்வுக்கு முன்பு கொண்டு வருவது கேள்விக்குறியே. 20ஆம் தேதி தர வேண்டும் என்றால் இன்று இரவோடாவது உரையைச் சேர்ப்பதை நிறுத்திக் கொண்டு, நகாசு வேலைகளைத் தொடங்க வேண்டும். ஆனாலும், தமிழ் விக்கிப்பீடியாவின் இந்த முயற்சி சிறப்பான தரத்தோடு வெளிவர வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். அதன் பொருட்டு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு பிறகு வெளியிட்டாலும் சரி. இது தொடர்பாக, இந்த முயற்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று முறையில் இறுதி முடிவை உங்களிடம் விட்டு விடுகிறேன்.--இரவி (பேச்சு) 05:27, 17 செப்டம்பர் 2013 (UTC)
நற்கீரன், நிகழ்வுக்கு முன் நூலைக் கொண்டு வரும் கால இலக்கைத் தாண்டி விட்டோம் என்பதால் நிகழ்வு முடிந்த பிறகு, இன்னும் சிறப்பாக கையேட்டைச் செப்பனிட்டு பதிப்பிப்போம் என்று பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:57, 20 செப்டம்பர் 2013 (UTC)
ஆமாம். இதே வேகத்தில் நகர்ந்து முடிக்க வேண்டும். நன்றி. --Natkeeran (பேச்சு) 23:45, 20 செப்டம்பர் 2013 (UTC)
நற்கீரன், இது தொடர்பாக பேசி வைத்துள்ள பதிப்பகத்தின் விவரம், அங்கு தொடர்பு கொள்ள வேண்டியவர் முகவரியை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்து விடுகிறேன். கையேட்டின் இறுதி வடிவம் முடிவு செய்யப்பட்ட பின், சென்னையில் உள்ள விக்கிப்பீடியர் எவருடைய உதவியையாவது பெற்றுக் கொண்டு இப்பணியை முடித்துக் கொள்ளலாம். அல்லது, உங்களுக்கு வசதியான வேறு பதிப்பகம் / இடத்திலும் அச்சிட்டுக் கொள்ளலாம். என்னுடைய பணிப்பளு காரணமாக வருங்காலத்தில் விக்கியில் அதிக நேரம் செலவிட முடியாது. எனவே, உரிய செலவை பதிப்பகத்துக்கு அனுப்பி வைப்பது தவிர மற்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதற்கு வருந்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:46, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி ரவி. நிறைய உழைப்பைச் செலுத்தி உள்ளீர்கள். உங்கள் தனிப்பட்ட வேலைகளைக் கவனித்து, ஆறுதலாக மீண்டும் பலமுடன் எம்மோடு இணையுங்கள். --Natkeeran (பேச்சு) 16:02, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நற்கீரன், இன்னும் ஆறு வார காலத்தில் பத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான அறிக்கையை விக்கிமீடியா நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே, இக்கையேட்டினை வெளியிடுவது பற்றிய நிலவரம், திட்டங்களைத் தெளிவுபடுத்தினால் அறிக்கையில் குறிப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 07:25, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]

இத் திட்டம் 10 ஆண்டு கொண்டாட்ட வரவுசெலவில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கம் ஓரளவு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து ஒருங்கிணைக்க என்னால் முடியாது. --Natkeeran (பேச்சு) 13:52, 17 சூலை 2014 (UTC)[பதிலளி]