விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/தேவைப்படும் கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 உள்ள நோய்கள் தொகுப்பிலிருந்து பட்டியல் இணைத்துள்ளேன். இவை பொதுப்பயன் மற்றும் அறிவியல் அறிவிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.நிறையக் கலைச்சொற்கள் உருவாக்க வேண்டியிருக்கலாம். கூகுள் தேடலிலும் இவை இடம் பெறும் என நினைக்கிறேன். தலைப்புகளைத் தமிழாக்கித் தந்தோமெனில் அவர்களுக்கு துணையாகவிருக்கும். --மணியன் 09:33, 19 பெப்ரவரி 2010 (UTC)

ஆம் மிக நல்ல பரிந்துரை. பரிந்துரைத்த கட்டமைப்பும் நன்று. தாய்ப்பகுப்பு, துணைப்பகுப்பு - அதன் கீழ் கட்டுரைத் தலைப்புகள் எனத் தரலாம். கட்டுரைகளுக்கான ஆங்கில விக்கி இணைப்புகளையும் சேர்க்க வேண்டும்.--ரவி 19:12, 19 பெப்ரவரி 2010 (UTC)

இது அவர்களின் உண்மையான கலைச்சொல்லறிவையும், உழைப்பையும் சோதிக்க உதவும். அந்த அளவுக்கு எதிர்பார்க்க முடியாது எனத் தெரிய வந்தால் வேறு மாதிரியான தலைப்புகளைத் தரலாம். -- சுந்தர் \பேச்சு 09:19, 22 பெப்ரவரி 2010 (UTC)