விக்கிப்பீடியா பேச்சு:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓசையின்றி நடைபெறும் இத்திட்டம் வெற்றிபெற ஆசையுடன் வாழ்த்துகள் !!--மணியன் 09:05, 22 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

இன்னும் சரியாகத் திட்டமிட்டுத் தொடங்கவில்லை. ஒரு எண்ணக்கருவாக இருந்ததை அப்படியே எழுதிவிட்டேன் :-). நீங்களும் இணைய வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:11, 22 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
சொல்லுங்கள்,செய்திடுவோம் ;)--மணியன் 10:19, 22 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

//நாம் ஆசைப்படுவதைத் தர இயலாது, நம்மிடம் உள்ளதையே தர இயலும் என்பதை இத்திட்டம் நினைவில் கொள்கிறது.//

கண்ணா, நீ விரும்புற பொண்ண கட்டிக்கிறத விட, உன்னை விரும்புற பொண்ணைக் கட்டிக்கிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும் ;) --இரவி 17:27, 22 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

குறுந்தட்டில் கிரந்தம் பற்றிய உரையாடல்கள்[தொகு]

  • srikanthlogic: ravidreams: a detailed page on current grantha usage would be mandated in the CD.. they must not think its spelling mistake.. we must make it clear the "as is where is" policy of ta.wiki now06:53:50 PM
  • ravidreams: ஓ.. சரி 06:54:03 PM
  • ravidreams: பொறுப்புத் துறப்புப் பக்கத்தின் ஒரு பகுதியாக இதனை இடலாம்06:54:18 PM
  • srikanthlogic: i suppose asking people to review / correct grantha chars is too much06:54:18 PM
  • srikanthlogic: yes06:54:24 PM
  • mahir: ஆமாம் நல்ல நினைவூட்டல், அதுபோல் இலங்கை வழக்கு பற்றியும் குறிப்பிடப் படவேண்டும் உதா, றொறன்டோ06:54:45 PM
  • ravidreams: புரியல. கிரந்த நீக்கம் / மாற்றம் கட்டுரைத் திருத்தத்தின் பகுதியாக இருக்காது06:54:46 PM
  • ravidreams: சரி06:55:09 PM
  • srikanthlogic: yes.. grantha changes should not be made.. they must be as is where is.. no granthafication / degranthafication06:55:16 PM
  • ravidreams: 06:55:30 PM
  • srikanthlogic: on the flip side, you are reaching more people with the agenda 06:55:32 PM
  • srikanthlogic: mahir: good note of cultural usage of vocabulary06:56:15 PM


chat log - july 2011

குறுந்தட்டு தவிர்த்த பிற வழங்கல் முறைகள்[தொகு]

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குறுந்தட்டுகளை அச்சடிக்க இயல்வது, அவற்றின் வழங்கல், செலவு, அருகி வரும் குறுந்தட்டுப் பயன்பாடு, குறுந்தட்டு ஆதரவு இல்லா கருவிகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு குறுந்தட்டு அல்லாத பிற வழிகளிலும் இவற்றை வாசிக்க ஏதுவாக்கும் வழிமுறைகளை இனங்காண வேண்டும். குறுந்தட்டாக வெளியிடுவது தவிர ஏதேனும் ஒரு இடத்தில் இருந்து தரவிறக்கக் கூடிய கோப்பாகவும், டொரன்ட் மூலமாகவும் வழங்குவது இயலுமா? இதற்கான வழங்கி இடத்தை எப்படிப் பெறலாம்? ஆண்டிராய்டு செயலி அளவுக்குக் கூட ஆசை இருக்கிறது. நமது வளங்களுக்கு உட்பட்டு என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.--இரவி 19:55, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

குறுந்தட்டு எண்ணிக்கையும் வழங்கலும்[தொகு]

எத்தனை குறுந்தட்டுகள் அச்சடிக்க இருக்கிறோம்? தோராய செலவு? எப்படி திரட்டலாம்? மலையாள விக்கியர் குறைந்த அளவு குறுந்தட்டுகளை மட்டும் இலவசமாக (?) அச்சடித்து, கூடுதலாக வேண்டுபவர்கள் படி எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்ததாக நினைவு. அல்லது, பரவலாகவும் தொடர்ந்தும் கிடைக்கும் வகையில் ஏதேனும் தமிழ்நாட்டு வலைவழிக் கடையின் வழியாக அனுப்பி வைக்க முனையலாமா? பொதுவாக, நமது சமூகத்தில் இலவசமாக கிடைக்கிறது என்றால் மொத்தமாக வாங்கி வைத்து வீணாக்கும் போக்கு உண்டு. எனவே, உற்பத்திச் செலவை முன்னிட்டேனும் இந்தக் குறுந்தட்டுக்குக் குறைந்தபட்ச விலை வைக்கலாமா?--இரவி 20:00, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]