விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 29, 2012

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேதாஜி இறுதி உரை செய்தியை நீக்கியிருக்கிறேன். அவர் ஆகஸ்ட் 15, 1945 இல் நிகழ்த்தியது ஆறுதல் உரை. ஜப்பான் சரணடைவுக்குப் பின் “கவலைப்படாதீர்கள், சீக்கிரம் மீண்டுவிடுவோம்” என்ற தோனியில். அதற்கும் இரண்டாண்டுகள் கழித்து விடுதலை கிடைதத்தற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேதிகள் ஒன்றாக அமைந்தது தற்செயலே. ஜப்பானின் தோல்விக்குப்பின் ஐஎன்ஏ செயல்படுவது நின்று போனது. இப்பேச்சு நிகழ்ந்த காலத்திலேயே பிரிட்டனில் புதிய கிளமெண்ட் அட்லீ ஆட்சி ஏற்பட்டு இந்தியாவுக்கு விடுதலை வழங்கி விடுவது என்று முடிவாகி விட்டது. (சிம்லா மாநாடு). இடைப்பட்ட இரு ஆண்டுகளில் விடுதலை கிட்டியதுடன் ஐஎன்ஏ இருந்த தொடர்புகள் ஐஎன்ஏ வழக்குகள் மட்டுமே--சோடாபாட்டில்உரையாடுக 05:57, 20 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

நிங்கள் கூறியது சரியாக இருக்கலாம். ஆனால் அக்கட்டுரையில் சேர்த்த மேற்கோள் இணைப்பில் நீங்கள் கூறியவாறு ஜப்பான் சரணடைவுக்குப் பின் அறிக்கை வெளியிட்டதாகவே குறிப்பிட்டிருந்தது. மேலும் அதில் ஐ.என்.ஏ. அதற்கு பிறகு செயல்பட்டதாகவும், அவ்வுரைக்கும் சுதந்திரத்துக்கும் தொடர்பு உள்ளதாகவும் போன்ற வாக்கியங்களும் குறிப்பிடப்படவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் 06:13, 20 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

மேற்கோளில் இல்லையெனினும், உ.தெ சொற்றொடரில் படித்தவுடன் அப்படியொரு தொடர்பை நாம் காட்டுவது போல பிம்பம் எழுகிறது (எனக்குத் தோன்றுகிறது :-)). நேதாஜி பேசினார், இரண்டாண்டுகளில் விடுதலை கிட்டியது (20 சொல்/இருவரி உச்ச வரம்பு சிக்கலால்) என்பது இரண்டிற்கும் தொடர்பு உள்ளதாக நாம் சொல்வது போல ஒரு பிம்பத்தைக் கொடுக்கிறது. மாற்றி எழுதிப்பார்த்தேன், ஆனால் அப்பொருள் அமையாமல் எழுத இயலவில்லை. இச்செய்தியினை அப்பொருள் வராமல் எழுத முயலுங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 06:26, 20 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறியது சரியெனவே தோன்றுகிறது. அவ்வாக்கியம் இங்கு இல்லாமலே இருக்கலாம். அப்படியே 20 வார்த்தைக்குள் கண்டுபிடித்து எழுதினாலும் உ.தெ சொற்றொடரில் படித்தவுடன் அப்படியொரு தொடர்பை நாம் காட்டுவது போல பிம்பம் அமைவதையும் தடுக்க இயலாது. நீக்கியதே சரி.--தென்காசி சுப்பிரமணியன் 06:34, 20 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]