விக்கிப்பீடியா:வரைவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரைவுகள் (drafts) என்பது வரைவு பெயர்வெளியில் உள்ள பக்கங்களாகும். இங்கு குறிப்பிட்ட காலத்திற்கு புதிய கட்டுரைகள் உருவாக்கப்படலாம் அல்லது விரிவாக்கப்படலாம்.[note 1] விக்கிப்பீடியாவின் முதன்மைப் பக்கத்திற்கு நகர்த்துவதற்கு முன்பாக புதிய கட்டுரைகளை உருவாக்கவும், உருவாக்கிய கட்டுரைகள் குறித்து மற்ற பயனர்களின் கருத்துக்களை அறியவும் பயனர்களை அனுமதிக்கிறது. உள்நுழைந்த பயனர்களுக்கு வரைவு பதிப்பை உருவாக்குவது அவர்களின் விருப்பத்திற்குட்பட்டது. தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள் தங்களது பயனர்வெளியில் வரைவுப் பக்கங்களை உருவாக்கலாம் அல்லது நேரடியாகவே முதன்மைப் பக்கத்தில் கட்டுரைகளை உருவாக்கலாம். தற்போதைய இந்தப் பெயர்வெளி செயல்முறை 2013இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

வரைவுகள் செயல்படும் விதம்[தொகு]

வரைவுகளைத் தேடுதல்[தொகு]

வரைவுப் பக்கங்கள் கூகுள் உள்ளிட்ட தேடுபொறியில் பட்டியலிடப்படுவதில்லை.[note 2] எனவே, பெரும்பாலான வாசகர்களால் இதில் உள்ள தகவல்களைப் படிக்க இயலாது. விக்கிபீடியாவின் உள்ளமைக்கப்பட்ட தேடுபொறியைப் பயன்படுத்தி எவரும் விக்கிபீடியாவில் வரைவுகளைத் தேடவும், பார்க்கவும் இயலும். "மேம்பட்ட" என்பதைத் தேர்வுசெய்து, பின்னர் விருப்பங்களின் பட்டியலில் "வரைவு" மற்றும்/அல்லது "வரைவு பேச்சு" என்பதைச் சொடுக்கவும் (இங்கு உள்ளது போல்).

வரைவுகளை உருவாக்குதல் மற்றும் திருத்துதல்[தொகு]

உள்நுழையாத பயனர்கள் உட்பட எவரும் வரைவுகளை உருவாக்கவும் திருத்தவும் இயலும். பொருத்தமான தலைப்பிற்கு முன்னர் வரைவு: என்பதை இட வேண்டும். இதற்கான உரையாடல் பக்கமான வரைவு உரையாடல் பக்கமும் உள்ளது. தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள் வரைவுப் பக்கங்களில் இருந்து முதன்மைப் பக்கத்திற்கு கட்டுரைகளை நகர்த்த முடியும். பூட்டப்பட்ட கட்டுரைகள் உட்பட தொழினுட்பச் சிக்கல் உள்ள கட்டுரைகள் நிர்வாகிகளின் உதவியுடன் நகர்த்தப்பட வேண்டும்.

புதிய வரைவை உருவாக்குக

வரைவை நீக்குதல்[தொகு]

வரைவுகள் என்பது தொகுத்தல் வேலை நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. வரைவின் துவக்கத்தில் இருக்கும் கட்டுரைகள் பெரும்பான்மையாக விக்கிப்பீடியாவின் தரநிலைகளை முதலில் பூர்த்தி செய்யாது.

துரித நீக்கல் தகுதிகள்[தொகு]

துரித நீக்கல் தகுதிகள் இதற்கும் பொருந்தலாம். பதிப்புரிமை மீறல்கள், காழ்ப்புணர்ச்சி, இழிவுபடுத்துதல் அல்லது தாக்கி எழுதுதல், சோதனைப் பக்கங்கள், அல்லது விளம்பர நோக்கோடு எழுதுதல் ஆகியவை விரைவாக நீக்கப்படும்.

குறிப்புகள்[தொகு]

  1. Including disambiguation pages; very rarely, new pages for non-article namespaces such as the Portal:, Template: and Wikipedia: namespaces are first incubated in the draftspace.
  2. Search engines or mirrors that do not respect the robots.txt convention may still index drafts.