உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:மேம்பாடு/தொழினுட்பம் வாயிலாக இலக்கினை அடைதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழினுட்பத்தின் உதவிகொண்டு மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதற்கான ஒருங்கிணைப்புப் பக்கம்.

தேவைப்படும் உதவிகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. தொடர்பான உரையாடல்களை பேச்சுப் பக்கத்தில் நடத்தலாம்.

(1) தமிழ்த் திரைப்படங்கள் குறித்தான கட்டுரைகளில் சான்றுகள்

[தொகு]

1975 ஆம் ஆண்டு வரை வெளியான தமிழ்த் திரைப்படங்கள் கட்டுரைகளில் குறைந்தது ஒரு மேற்கோள் சேர்க்கும் பணியானது 2016 ஆம் ஆண்டு நடந்தது. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/1975 வரை/சான்றுகள் சேர்த்தல்

திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கை எழுதிய கட்டுரைகள் தி இந்து இணையத்தளத்தில் உள்ளன. அக்கட்டுரைகளே மேற்கோளாக பெரும்பாலும் சுட்டிக்காட்டப்பட்டன. இப்போது, தி இந்து இணையத்தளம் பணம் செலுத்தி பார்க்கவேண்டிய தளமாக மாறிவிட்டது. எனவே, ராண்டார் கை அவர்களின் கட்டுரைகளை முழுமையாக படிக்க இயலவில்லை. எடுத்துக்காட்டு: சாந்த சக்குபாய்

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு இணையான ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில், waybackmachine / archive.today தளத்தின் பக்கமானது மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு: Shantha Sakku Bai

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளிலும் waybackmachine / archive.today தளத்தின் பக்கமானது காட்டப்பட வேண்டும்.

கிடைக்கும் பலன்கள்:

  1. மேற்கோளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள பக்கத்தை முழுவதுமாக படிக்க இயலும். சில நூறு கட்டுரைகள் மேம்பாட்டை அடையும்.
  2. ஒரு மேற்கோள்கூட இல்லாத சில கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன. அவற்றிற்கு இணையான ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள், ராண்டார் கை அவர்களின் கட்டுரையை மேற்கோளாக கொண்டுள்ளன. இந்த 100-200 கட்டுரைகள் மேம்பாட்டை அடையும்.

(2) மேற்கோள் தேவையற்ற பக்கங்கள்

[தொகு]

பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கத்திற்கு மேற்கோள்கள் தேவையில்லை. ஆனால், "சான்றில்லை" எனும் வார்ப்புரு இடப்பட்டிருக்கலாம். இத்தகைய பக்கங்களின் பட்டியல் கிடைத்தால், இதனை சரிசெய்ய இயலும். எடுத்துக்காட்டு: [1]

(3) CS1 பிழைகள்

[தொகு]

மொத்தமாக 3,304 இடங்களில் இப்பிழைகள் களையப்படல் வேண்டும். ஒரு கட்டுரையில் பல பிழைகள் இருக்கலாம். எனவே கட்டுரைகளின் எண்ணிக்கையும் 3,304 என்பதில்லை; குறைவாக இருக்கக்கூடும்.

காண்க: பகுப்பு:CS1 பிழைகள்

(4) எழுத்துப் பிழைகள்

[தொகு]
  • வெளியிணைப்புகள் என இருக்கவேண்டும். வெளியிணைப்புக்கள் என இருப்பது தவறாகும். எடுத்துக்காட்டு: பட்டு

(5) வடிவமைப்புப் பிழைகள்

[தொகு]

கட்டுரையின் வடிவமைப்பில் மேற்கோள்கள், வெளியிணைப்புகள் என்பதாகவே வரிசை இருக்கவேண்டும். வரிசை மாறியிருந்தால், சரிசெய்ய வேண்டும். எடுத்துக்காட்டு: போர்ட் இந்தியா நிறுவனம். தானியங்கி கொண்டு சரிசெய்ய இயலாவிட்டாலும், பட்டியல் கிடைத்தால், மனித ஆற்றல் வாயிலாக சரிசெய்யலாம்.