போர்ட் இந்தியா நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்
வகைதுணை நிறுவனம்
நிறுவுகைஅக்டோபர் 1995 ( மகிந்திரா போர்ட் இந்தியா லிமிடெடாக)
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு
முதன்மை நபர்கள்மைக்கேல் போன்ஹம், தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்
தொழில்துறைதானுந்து தொழில்துறை
உற்பத்திகள்தானுந்துகள்
பணியாளர்10,000
தாய் நிறுவனம்போர்ட் தானுந்து நிறுவனம்
இணையத்தளம்www.india.ford.com
ஃபோர்ட் ஐகான்

ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Ford India Private Limited) இந்தியாவில் போர்ட் தானுந்து நிறுவனத்திற்கு முழுமையும் உரிமையான துணை நிறுவனமாகும். இதன் தலைமையகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவில் சீருந்து தயாரிப்பாளர்களில் ஆறாவதாக உள்ளது.

வரலாறு[தொகு]

1996ஆம் ஆண்டு புதிய ஃபோர்ட் இந்தியா பி.லிமிடெட்டின் உற்பத்தி துவங்கினாலும் இதன் ஆரம்பம் 1907ஆம் ஆண்டு போர்ட் மாடல் ஏ உடன் தொடங்கியது. தற்போதைய தொழிற்சாலை சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ளது. 1926ஆம் ஆண்டு தொடங்கிய முயற்சி 1954ஆம் ஆண்டு மூடப்பட்டது. மீண்டும் மகிந்தரா நிறுவனத்துடன் 50-50 இணைந்த முயற்சியாக மகிந்தரா போர்ட் இந்தியா லிமிடெட் (MFIL) என அக்டோபர் 1995 அன்று தொடங்கியது. போர்ட் தானுந்து நிறுவனம் தனது பங்கை 72% ஆக மார்ச் 1998இல் உயர்த்தி ஃபோர்ட் இந்தியா பி. லிட் என மறுபெயரிட்டது. [1]

நிறுவன ஆளுமை[தொகு]

ஃபோர்ட் இந்தியாவின் மேலாண்மையை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக மைக்கேல் போன்ஹம், செயல் இயக்குனர் (இயக்கம்) சந்தீப் சன்யால், செயல் இயக்குனர் (சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவை) நிகெல் ஈ. வார்க், துணைத் தலைவர் (நிதி) மற்றும் முழுநேர இயக்குனராக குல்ஜித் ராணா, துணைத் தலைவர் (மனிதவளம்) வைரமணி பாண்டியன் ஆகியோர் நிர்வகிக்கின்றனர்.

தயாரிப்பு வசதிகள்[தொகு]

சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள மறைமலை நகரில் ஆண்டுக்கு 100,000 அலகுகள் தயாரிக்கக்கூடிய போர்ட் இந்தியாவின் முதன்மை தொழிற்சாலை அமைந்துள்ளது. மார்ச் 2010இல் இதன் புதிய இரக வண்டி போர்ட் ஃபிகோவை அறிமுகப்படுத்துகையில் [2] இந்தத் திறனளவை 200,000 அலகுகளாக இரட்டிப்பாக்க போர்ட் தானுந்து நிறுவனம் $500 மில்லியன் செலவழித்துள்ளது. இதனை ஆண்டுக்கு 250,000 அலகுகளாக உயர்த்த புதிய தொழிலக வசதிகளையும் அமைத்து வருகிறது. [3][4]

இரகங்கள்[தொகு]

தற்போது[தொகு]

  1. போர்ட் எண்டவர் ( 2004 அறிமுகமானது)
  2. பியெஸ்டா ( 2005 அறிமுகமானது)
  3. ஃபோர்ட் ஃபிகோ ( 2010 அறிமுகமானது)

நிறுத்தப்பட்டது[தொகு]

  1. ஃபோர்ட் ஐகான் (1999-2010)
  2. போர்ட் எஸ்கார்ட் (1996–2001)
  3. போர்ட் மொண்டியோ (2001–2006)
  4. போர்ட் இஃபூஷன் (2004–2010)

விற்பனை மற்றும் சேவை பிணையம்[தொகு]

ஏப்ரல் 2011 நிலவரப்படி, போர்டு இந்தியாவிற்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மூன்று நடுவண் ஆட்சிப்பகுதிகளிலும் உள்ள 107 நகரங்களில் 170 முகமைகள் செயல்பட்டு வருகின்றன.

விற்பனை செயல்திறன்[தொகு]

2010 ஆண்டில், போர்ட் இந்தியா தனது 2009ஆம் ஆண்டின் விற்பனையான 29,488 சீருந்துகளுக்கெதிர் 83,887 சீருந்துகளை விற்று 172% வளர்ச்சியைக் கண்டுள்ளது.[5]

ஏற்றுமதி[தொகு]

போர்டின் இந்தியத் தொழிற்சாலையிலிருந்து குறைந்தளவு சீருந்துகள் தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகிறது. [6]

இதனையும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ford India Private Ltd, Ford Cars India, Ford Motors India, Ford Fiesta India, Ford in India
  2. "Ford Figo roll out by March 2010". Archived from the original on 2010-02-05. பார்க்கப்பட்ட நாள் 2011-06-06.
  3. "Ford - Virtual Plant Tour". Archived from the original on 2011-06-15. பார்க்கப்பட்ட நாள் 2011-06-06.
  4. Ford India to export small cars from mid-2010
  5. "Ford Records Strong Sales Growth In 2010, Figo Caps The Year With Several Awards". Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
  6. "Ford India begins bulk export of cars from Chennai". Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2011-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ட்_இந்தியா_நிறுவனம்&oldid=3590431" இலிருந்து மீள்விக்கப்பட்டது