விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 5, 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈராக்குது அணை இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மகாநதி ஆற்றின் குறுக்கே சம்பல்பூர் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் கட்டப்பட்டுள்ளது. அணைக்கு பின்னால் ஏரி மற்றும் 55 கி.மீ. நீர்த்தேக்கம் பரவியுள்ளது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு செயற்படுத்தப்பட்ட முதலாவது பெரிய பல்நோக்கு நதி பள்ளத்தாக்கு திட்டங்களில் இவ்வணையும் ஒன்றாகும். 1936 ஆம் ஆண்டு மகாநதி படுகையில் ஏற்பட்ட வெள்ளப்பேரழிவுக்கு முன்பு, மகாநதிப் படுகையில் ஏற்படக்கூடிய வெள்ளத்தின் பிரச்சினையைச் சமாளிக்க நீர்த்தேக்கங்களில் வெள்ளங்களின் நீரை சேகரிக்க சர். விசுவேசுவசரய்யாவால் விரிவான விசாரணை முன்மொழியப்பட்டது. 1945 ஆம் ஆண்டில், தொழிலாளர் உறுப்பினர் முனைவர். பி. ஆர். அம்பேத்கர் தலைமையில், மகாநதியை பல நோக்கத்திற்காக பயன்படுத்த வெள்ளத்தை கட்டுப்படுத்தும் சாத்தியமான முடிவுகளில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி மத்திய நீர்வழி நீர்ப்பாசன ஆணையம் கட்டுமானப் பணியைத் தொடங்கியது. மேலும்...