விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 12, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேநீர் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். தேயிலைச் செடியிலுள்ள இலைகள், தளிர்கள் மற்றும் மொட்டுக்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. தேயிலைகளை பெரும்பாலான மக்கள் சூடான நீரில் வடித்துப் பின் அவரவர் விருப்பத்திற்கிணங்க பால் மற்றும் சர்க்கரையைக் (இலங்கைத் தமிழ்: சீனி) கலந்தோ எதையும் கலக்காமலோ அருந்துகின்றனர். சிலர் தேநீரைக் குளிர்வித்தும் அருந்துகின்றனர்.


பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer, 1918 - மார்ச் 10, 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.