விக்கிப்பீடியா:பக்கப் பார்வைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியாவில் உள்ள ஒவ்வொரு பக்கத்தை ஒருவர் பார்வையிடும் பொழுதும், அதன் எண்ணிக்கை கூடுகிறது. பக்கப் பார்வைகள் அல்லது பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிவரம் என்பது இதுவரை அந்தப் பக்கம் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள், சராசரியாக மணிக்கு ஐந்தாயிரம் முறை பார்க்கப்படுகின்றன. இது ஒவ்வொரு மாதமும், சில நூறுகள் ஏறி இறங்குகிறது.

வழிமுறை[தொகு]

பக்கப் பார்வை எண்ணிக்கையை அறிய இரண்டு வழிகள் உண்டு

  1. .அந்த பக்கத்தின் இடப்பக்கத்தில் உள்ள கருவிப்பட்டையின் கீழே பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிவரம் என்ற இனைப்பைச் சொடுக்கினால் எண்ணிக்கையை அறிய முடியும்.
  2. . அந்த பக்கத்தில் இடப்பக்கமுள்ள பக்கத் தகவல் என்பதைச் சொடுக்கினால், பக்கத்தினைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும். அதில் பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிவரமும் இருக்கும். எ. கா: இந்தப் பக்கத்திற்கானது

காரணங்கள்[தொகு]

ஒரு பக்கத்தின் பார்வை எண்ணிக்கை அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையைப் பொருத்தே அமைகிறது அவர்கள் பார்ப்பதற்கும் சில காரணங்கள் உண்டு.

  1. .உள்ளிணைப்பு: ஒரு தலைப்பை பிற கட்டுரைகளில் இணைத்திருந்தால், அவற்றின் வழியாக இந்தப் பக்கத்தை அடைய முடியும்.
  2. .வேற்று மொழி இணைப்புகள்: ஒரு கட்டுரையை அதன் வேற்று மொழிக் கட்டுரையுடன் இணைத்தால், பிற மொழிப் பயனர்களும் சில வேளைகளில் பார்க்கக் கூடும்.
  3. .நடப்பு நிகழ்வுகள்: தற்போதைய பரபரப்பான நிகழ்வுகள் பற்றி எழுதினாலும், அதன் பரவலான தேடல் காரணமாக, தேடுபொறிகளில் கட்டுரையும் முடிவாகக் காட்டப்படும்.
  4. .முக்கியத்துவம்: வரலாற்று முக்கியத்துவம் மிக்கவையும், பிரபலமான நபர்கள், ஊர்கள், பண்பாடு, விளையாட்டு, கலை, தொழில்நுட்பம் தொடர்புடையனவும் அதிகம் பார்க்கப்படுகின்றன.

அதிகரிக்க வழிகளும் அவற்றால் விளையும் நன்மைகளும்[தொகு]

ஒருவர் ஒரு கட்டுரையை பார்க்க வேண்டும் என்றால், அவருக்குப் பிடித்தமான தலைப்பில் எழுதலாம். பக்கப் பார்வையை அதிகரிக்க சில வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. . கட்டுரைகளில் உள்ளிணைப்பை வழங்கலாம். அதாவது, தொடர்புடைய பிற பக்கம் ஒன்றிற்கு இணைப்பு வழங்கலாம். இணைப்பு வழங்கப்பட்ட தலைப்பில் கட்டுரை இருந்தால் படித்து அறிய வசதியாயிருக்கும். கட்டுரையில் தொடர்ச்சி இருக்கும் என்பது கூடுதல் வெற்றி. இல்லாவிட்டாலும், உருவாக்கிக் கொள்ளலாம்.
  2. .வேற்று மொழியில் உள்ள, குறிப்பாக, அதிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளை எழுதலாம், அதிலும், வேற்று மொழியிலும், தமிழிலும் மட்டும் இருந்தால், தமிழ் விக்கிப்பீடியா அதன் நோக்கம் நிறைவேறியதாகக் கருதலாம்.
  3. .புதிதாக வெளிவந்த திரைப்படங்கள், நூல்கள், கலைப்பொருட்கள், சாதனங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுதலாம்.
  4. .நடப்பு நிகழ்வுகளான அரசியல், விளையாட்டு, அமைப்புகளின் செயல் திட்டங்கள் குறித்து எழுதலாம்.
  5. . கட்டுரைகள் விரிவாக்கலாம். விரிவான கட்டுரைகளே அதிகத் தகவல்களைக் கொண்டிருக்கும் என்பதால், அவற்றை அதிகம் பார்ப்பர். படங்கள் சேர்க்கலாம். பிற அழகூட்டும் வேலைகளும், உரை திருத்தமும் செய்யலாம்.
  6. . ஆதாரங்கள் சேர்க்கலாம். இவை கட்டுரைக்கு நம்பகத் தன்மையை அதிகரிக்கின்றன.

மேலும் பார்க்கவும்[தொகு]

இங்குள்ள இணைப்புகளில் உள்ளவற்றையும் மேம்படுத்தி உதவலாம்.