உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:தேர்தல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முந்தைய தேர்தல்கள்: /2004

2005-ம் ஆண்டிற்கான விக்கிமீடியா நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைக்கான தேர்தல் அண்மித்துவிட்டது. இச்சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் பொருப்பாளர்களே விக்கிபீடியா தொடர்பான முடிவுகளை எடுக்க வல்லவர்கள்; அவர்கள் இணைய தள மேற்பார்வையாளர்கள் அல்ல.

இரண்டு பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் ஒத்த பொறுப்புக்களையுடைய இரு உறுப்பினர்களும் ஈராண்டுகள் பதவியில் இருப்பார்கள். 0:00 May 30, 2005 (UTC) அன்று வரை தாங்கள் உறுப்பினராக உள்ள விக்கிமீடியா திட்டத்தில் 400 திருத்தங்களாவது செய்துள்ள எவரும் வாக்களிக்கலாம். அவற்றில் ஒரு திருத்தமாவது தேர்தலுக்கு 90 நாட்கள் முன்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். தொகுப்பதிலிருந்து எப்பொழுதிற்கும் தடை செய்யப் பெற்றவர்கள் மற்றும் பல கணக்குகள் கொண்ட ஒரே பயனரின் வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் செல்லாத வாக்குகள் என்று அறிவிக்க முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளவும். ஒருவரின் பல்வேறு விக்கிமீடியா திட்டங்களிலுள்ள பயனர் கணக்குகளும் இவ்வாறாகவே கருதப்படும்.

ஆமோதிப்பு வாக்களிப்பு முறை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு வாக்காளரும் தான் விரும்பும் எத்தனை வேட்பாளர்களுக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். அதிக வாக்குகளைப் பெறும் முதல் இரு வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர். இரண்டாம் இடத்தில் இருவர் சமவாக்குகளைப் பெற்றிருந்தால் அவர்களுள் மற்றுமொரு தேர்தல் நடைபெறும்.

விருப்பமுள்ள வேட்பாளர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் நுழைவு விண்ணப்பத்தை (வேட்பு மணுவை) நிரப்பவும். பின் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வாக்காளர்கள் முன்வைக்க மூன்று வாரங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். மொழிபெயர்ப்பாளர்கள் அவற்றை பல மொழிகளுக்கு மொழிபெயர்ப்பர். அதன் பின் வாக்களிப்பு துவங்கும்.

வாக்காளர் பதிவு:

செவ்வாய், 0:00 ஜூன் 7, 2005 (UTC) முதல்
திங்கள், 24:00 ஜூன் 27, 2005 (UTC) வரை

வாக்குப்பதிவு:

செவ்வாய், 0:00 ஜூன் 28, 2005 (UTC) முதல்
திங்கள், 24:00 ஜூலை 11, 2005 (UTC) வரை

தேர்தல் அலுவலர்களின் ஆங்கில மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.