விக்கிப்பீடியா:தேர்தல்கள்/2004

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

14 மே 2004 ல், புதிய தீர்மானத்துக்கமைய நிகழ்நிலைப் படுத்தப்பட்டது.

அன்பர்கள் அனைவருக்கும்,

விக்கிமீடியா நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைக்கான தேர்தல் அண்மித்துவிட்டது. மிகவும் கடுமையாக உழைத்து, வளர்ந்துவரும் இந்த விக்கிமீடியா சமூகத்தை இப்போதுள்ள நிலைக்குக் கொண்டுவந்துள்ள ஏராளமான பங்களிப்பாளர்களின் சார்பில் பேசுவதற்காகப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்க இருக்கிறோம். விக்கிமீடியாவுக்காக இறுதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனுடைய வேலை, இணையத்தள நிர்வாகம் அல்ல. விக்கிமீடியா நம்பிக்கை நிதியம் பற்றியும், அதன் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை பற்றியும் மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு இங்கே பாருங்கள் 1.

நாங்கள் இரண்டு பதவிகளுக்காக வாக்களிக்க உள்ளோம்: பங்களிக்கும் செயற்படு உறுப்பினர் பிரதிநிதி மற்றும் ஆர்வலப் பயனர் பிரதிநிதி. இவற்றிலொன்றில் வாக்களிப்பதற்கு, நீங்கள், ஏதாவதொரு விக்கிமீடியாத் திட்டத்தில் குறைந்தது மூன்றுமாதங்களாவது இருந்திருக்க வேண்டும். எதிர்காலத் தேர்தல்களில், பங்களிப்புச் செய்யும் செயற்படு உறுப்பினர்கள் (பணம் செலுத்தும் விக்கிமீடியா நம்பிக்கை நிதிய உறுப்பினர்கள்) மட்டுமே பங்களிப்புச் செய்யும் செயற்படு உறுப்பினர் பிரதிநிதி பதவிக்கு வாக்களிக்க முடியும், ஆனால் இந்த முதலாவது தேர்தலில் எல்லா விக்கிமீடியா பங்களிப்பாளர்களுக்கும் வாக்களிக்கும் தகுதி உண்டு.

எல்லா வாக்காளர்களும் பங்களிக்கும் செயற்படு உறுப்பினர் பிரதிநிதிக்கும், ஆர்வலப் பயனர் பிரதிநிதிக்கும் வாக்களிப்பார்கள். தேர்தல் run as Approval முறைப்படி நடைபெறும். ஒவ்வொரு வாக்காளரும், போட்டியிடும் பதவிகளுக்குத் தகுதியானவரெனத் தான் கருதும் எல்லா வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். ஒவ்வொரு பதவிக்கும் ஆகக்கூடிய வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

சம அளவு வாக்குகள் பெறும் நிலை ஏற்பட்டால் ஒரு run-off தேர்தல் நடைபெறும்.

நீங்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினால், தயவுசெய்து 2 இல் நுழைவுப் பத்திரத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.

வேட்பாளர்கள் தங்களை நியமித்துக் கொள்வதற்கு 29 மே 2004, வெள்ளிக்கிழமை முடியும்வரை அவகாசம் உண்டு. தேர்தல் 30 மே 2004 சனிக்கிழமை ஆரம்பித்து 12 ஜூன் 2004, சனிக்கிழமை நடுநிசி GMT வரை நடைபெறும். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

மேலும் தகவல்கள் வரவுள்ளன. விபரங்களுக்கு இங்கே பாருங்கள் 3

இது பாதுகாக்கப்பட்ட பக்கம். உங்கல் எல்லாக் கருத்துக்களையும் 5 இல் எழுதுங்கள்.

எல்லா வேட்பாளர்களுக்கும் தேர்தலில் அதிர்ஷ்டம் கிடைக்க வாழ்த்துகிறோம்.

Imran ஆங்கிலத்தில்

Danny ஆங்கிலத்தில்

இணைத் தலைவர்கள் விக்கிமீடியா தேர்தல் குழு.