விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/வார்ப்புரு சேர்த்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரே உள்ளுரையை பல பக்கங்களில் இடுவதற்கு மீடியாவிக்கி மென்பொருள் வார்ப்புரு (template) என்ற சிறப்பு நிரலை வழங்குகிறது. வார்ப்புருக்கள் சீர்தர விக்கிப் பக்கங்களாகும். இவற்றின் உள்ளடக்கங்கள் உள்ளபடியே பிற பக்கங்களில் பெயர்த்தெழுதப் படுகின்றன. இவை பொதுவாக சீர்தரப்படுத்திய தகவற் சட்டங்கள், சீர்தரப்படுத்திய எச்சரிக்கைகள்/அறிவிக்கைகள், தளப்பயண பெட்டிகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன.

மிகப் பரவலாக மாற்றிடச் சேர்க்கை என்றமுறையில் தகவலிடப்பட வேண்டிய பக்கத்தில் வார்ப்புருவிற்கான குறிப்பு {{வார்ப்புரு பெயர்}} என்ற வடிவத்தில் விக்கி உரையில் இடப்படுகிறது. வார்ப்புருவின் உள்ளடக்கத்தின் தகவல்கள் இற்றைப் படுத்தப்படும்போது அந்த வார்ப்புரு இணைக்கப்பட்ட அனைத்து பக்கங்களிலும் இந்த மாற்றம் இற்றைப்படுத்தப்படுகிறது. இதனால் தகவல் பெட்டிகளில் நபர் குறித்தத் தனித்தகவல்கள், இடங்களின் மக்கள்தொகை போன்ற தரவுகள் போன்றவற்றை இற்றைப்படுத்த எளிதாக உள்ளது. மற்றொரு வகை மாற்றீடு எனப்படும்: இதில் வார்ப்புருவிலுள்ள உள்ளடக்கம் தகவலிடப்பட வேண்டிய பக்கத்தின் விக்கிஉரையில் ஒற்றியிடப்படுகிறது. இந்த முறையில் அந்தப் பக்கத்தின் தொகுப்பு முடிந்து சேமித்தப் பிறகு வார்ப்புருவுடன் எந்தத் தொடர்பும் இருக்காது.

உருவாக்கம்[தொகு]

வார்ப்புருக்கள் சீர்தர விக்கிப் பக்கங்களாகும். இவற்றின் உள்ளடக்கம் உள்ளபடியே பிற பக்கங்களில் பெயர்த்தெழுதப் படுகின்றன. வார்ப்புருக்கள் "வார்ப்புரு:", என்ற பெயர்வெளியில் எழுதப்படுகின்றன. எனவே வார்ப்புருக்களையும் மற்ற விக்கிப் பக்கங்களைப் போலவே எவரும் உருவாக்கலாம்; திருத்தலாம்; மாற்றலாம்.

வார்ப்புருப் பக்கங்கள் விரும்பிய விக்கியுரைக் கொண்டிருக்கும்; வேறு வார்ப்புருக்களைப் பயன்படுத்த அவற்றிற்கான குறிப்புக்களையும் கொண்டிருக்கலாம். இவை மட்டுப்படுத்திய நிரல்மொழித் திறனைக் கொண்டுள்ளன: விருப்பமைவு மதிப்புகள் (கூறளவுகள் எனப்படும்),கணக்கிடுதல், வெவ்வேறு வழிபிரித்தல்கள்,விக்கிக்கான சிறப்பு ஆணைமொழிகள் (நாள்,நேரம் பக்கம் போன்றவற்றிற்கான பெயர்கள்) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் விக்கியுரையின் எந்தப் பகுதி மாற்றிடச் சேர்க்கை அல்லது மாற்றீடின்போது சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கான குறிச்சொற்களையும் கொண்டிருக்கும். எனவே வார்ப்புரு பக்கத்தின் தோற்றம் மாற்றிடச் சேர்க்கையில் சேர்க்கப்படும் விக்கியுரையிலிருந்து மாறுபட்டிருக்கும். மேலும் பல வார்ப்புருக்களுக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது, எந்த கூறளவுகள் கொடுக்கப்பட வேண்டும் போன்ற செய்திகளை விளக்கும் ஆவணப்பக்கமும் இணைக்கப்பட்டிருக்கும். இந்தப் பக்கம் மாற்றிடச் சேர்க்கையின்போது குறிப்பிட்டப் பக்கத்தில் சேர்க்கப்படாது.

எச்சரிக்கை/அறிவிக்கை வார்ப்புருக்கள்[தொகு]

விக்கிப்பீடியாவை துப்புரவாக்கும் பொருட்டு பயனர்கள் தாங்கள் கண்ட குறைகளை நிறைவாக்கும் பொருட்டு வார்ப்புருக்களை இடலாம். இவற்றில் பொதுவாக கூறளவுகளை நிரப்ப வேண்டியிருக்காது.

எடுத்துக்காட்டு - எச்சரிக்கை வார்ப்புருக்கள்[தொகு]

எடுத்துக்காட்டாக ஒரு கட்டுரை தமிழ் விக்கிப்பீடியா பேணும் மொழி/உரை நடைக்கேற்ப இல்லையாயின் அந்தப் பக்கத்தின் விக்கியுரையின் முதல் வரியில் {{துப்புரவு}} என இட்டால் அதன் விளைவாக வெளிப்படுத்தப்பட்ட பக்கத்தில் கீழ்க்கண்ட எச்சரிக்கைப் பெட்டி காட்டப்படும்:

வகைப்படுத்தல்கள்[தொகு]

சில கட்டுரைப் பக்கங்களை வகைப்படுத்தவும் வார்ப்புருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. காட்டாக புவியில் உள்ள ஓரிடம் அல்லது புவியியல் குறித்த குறுங்கட்டுரைகளை இனம் காண அத்தகைய கட்டுரைகளில் {{புவி-குறுங்கட்டுரை}} என்ற வார்ப்புருவை இட்டால் கீழ்க்கண்டவாறு தகவற்பெட்டி காட்சிப்படுத்தப்படுவதோடு உரிய பகுப்பிலும் சேர்க்கப்படுகின்றது.


எடுத்துக்காட்டு - தகவல் சட்டம்[தொகு]

தமிழ் விக்கியூடகக் கையேடு/வார்ப்புரு சேர்த்தல்
துறை:{{{பொருள்}}}

பெரும்பாலான பயனர்கள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு இருக்கும் வார்ப்புருக்களையே பயன்படுத்துவார்கள். எ.கா ஒரு நூல் பற்றிய தகவல்களைக் கொண்டது நூல் தகவல் சட்டம் வார்ப்புரு.

இந்த வார்ப்புருவில் கூறளவுகள் (parameters) எனப்படும் இடதுபக்கத்தில் உள்ளவை (நூல் ஆசிரியர், நூல் பெயர்) அவற்றின் வெளிப்பாட்டுப் பண்புகளுடன் நிரல்மொழியில் எழுதப்பட்டிருக்கும். இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தும் பக்கத்தில் ( எடுத்துக்காட்டாக நரிக்குறவர் இனவரைவியல் நூல் குறித்தான பக்கத்தில்) கீழ்கண்டவாறு வார்ப்புருவின் கூறளவுகள் நிரப்பப்பட்டிருக்கும். இந்த வார்ப்புருவின் விளைவாக அந்தப் பக்கத்தில் வலதுபுறத்தில் உள்ளது போன்ற வடிவமைப்புடன் தகவல்கள் வெளிப்படுத்தப்படும்.

நரிக்குறவர் இனவரைவியல்
நூல் பெயர்:நரிக்குறவர் இனவரைவியல்
ஆசிரியர்(கள்):கரசூர். பத்மபாரதி
வகை:கட்டுரை
துறை:இனவரைவியல்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:270 பக்கங்கள்
பதிப்பகர்:தமிழினிப் பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு (2004)
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு
{{நூல் தகவல் சட்டம்| 
படிமம்              = 20051108-narikuravar front.jpg|
தலைப்பு            = நரிக்குறவர் இனவரைவியல் |
நூல்_பெயர்         = நரிக்குறவர் இனவரைவியல் |
நூல்_ஆசிரியர்      = [[கரசூர். பத்மபாரதி]] |
வகை              = கட்டுரை |
பொருள்            = [[இனவரைவியல்]] |
இடம்              = சென்னை |
மொழி             = [[தமிழ்]] |
பதிப்பகம்           = தமிழினிப் பதிப்பகம் |
பதிப்பு              = முதல் பதிப்பு (2004)  |
பக்கங்கள்          = 270 பக்கங்கள் |
ஆக்க_அனுமதி     = ஆசிரியருக்கு |
}}

இது அந்த நூல் பற்றிய கட்டுரையில் அல்லது இத் தகவல் தேவைப்படும் பிற இடங்களில் சேர்க்கப்படலாம். இத்தகைய சீர்தரம் செய்யப்பட்ட தகவல்சட்ட வார்ப்புருக்களால் நூல் குறித்த அனைத்துப் பக்கங்களிலும் ஒரே மாதிரியாக வடிவமைப்பு அமைய வழி ஏற்படுகிறது. மேலும், புதிதாக ஒரு பக்கத்தை உருவாக்கும் பயனர் அப்பக்கத்தில் எந்தெந்த தரவுகளை சேர்க்க வேண்டும் என்பதை நினைவுறுத்தும் ஒரு கருவியாகவும் தகவல்சட்ட வார்ப்புருக்கள் பயன்படுகின்றன.