விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குறுக்கு வழி:
WP:10koodal
To read this page in English, please click here
Tamil Wiki 10th anniversary logo.png

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நேரமும் இடமும்[தொகு]

இடம்:

டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.

வழி:

 • மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
 • பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.

நேரம்:

 • காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
 • மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.

பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.

நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.

ஏதாவது எடுத்து வர வேண்டுமா?[தொகு]

உங்கள் மடிக்கணினி, Data card, படம்பிடி கருவிகளைக் கொண்டு வந்தால் பயிற்சிகளில் பங்கெடுக்க உதவியாக இருக்கும். எனினும், இவற்றைக் கொண்டு வருதல் கட்டாயம் இல்லை.

நிகழ்ச்சி நிரல்[தொகு]

நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி

 • 09.00 - 10.30 - புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள் - தமிழ்த் தட்டச்சு, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம், விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல், விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
 • 10.30 - 11.15 - ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது என்ன? - இதழாளரும் ஆழி பதிப்பக நிறுவனரும் தொழில்முறை மொழிபெயர்ப்பாளருமான செ. ச. செந்தில்நாதன் உரையாடுகிறார்.
 • 11. 15 - 12.00 - சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி? - ஹரி பிரசாத் பயிற்சி அளிக்கிறார். ஹரி பிரசாத் ஒரு ஒளிப்படக்கலை விரும்பி. அவரது படங்களை என்ற http://www.500px.com/HariNair முகவரியில் காணலாம்.
 • 12.00 - 12.30 - சிறப்பாக பரப்புரைகள் செய்வது எப்படி? - தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அமைப்பினருடன் ஒரு கலந்துரையாடல்

மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்டம்.

 • வரவேற்புரை (2 நிமிடங்கள்)
 • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
 • தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
 • முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
 • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
 • தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
 • தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல், நித்யா சீனிவாசன் எழுதிய லினக்சு மின்னூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
 • பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
 • நன்றியுரை (3 நிமிடங்கள்)

சிற்றுண்டி, தேநீர் வழங்கி நிகழ்வு நிறைவு பெறும்.

சமூக வலைத்தளப் பக்கங்கள்[தொகு]

கருத்துகள்[தொகு]

படங்கள்[தொகு]