விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 5, 2010
Appearance
தாமரைக் கோயில் இந்தியாவில் தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் என அறியப்படுகிறது. பஹாய் வழிபாட்டுத்தலம் தில்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இது இந்தியத் துணைக்கண்டத்தின் தாய்க் கோயிலாகக் கருதப்படுகிறது. இது எண்ணற்ற கட்டிடக்கலை விருதுகளை வென்றுள்ளது. ஏனைய பிற பஹாய் வழிபாட்டுத்தலங்களைப் போன்றே தாமரைக் கோயிலானது மதத்தைப் பொருட்படுத்தாத அல்லது பஹாய் புனித நூல்களில் வலியுறுத்தப்பட்டிருக்கும் மற்ற தனித்துவங்கள் கொண்ட அனைவருக்குமான கோயிலாக இருக்கிறது. |