விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 21, 2011
Appearance
கார்பன் நானோகுழாய்கள் என்பவை உருளைவடிவ நானோ கட்டமைப்பு உடைய கார்பனின் புறவேற்றுமைத்திரிவுகள் ஆகும். நானோகுழாய்கள் நீளம்-விட்டம் விகிதத்தில் வரை உருவாக்கப்படுகின்றன. இவை ஒற்றைச்சுவர் நானோகுழாய்கள், பலசுவர் நானோகுழாய்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. தற்போது இவை புறமின்தேக்கிகளிலும் இயக்கமுறை நினைவக மூலகங்களிலும் படச்சுருள்களிலும் உடலினுள் குறிப்பிட்ட இடத்தில் மருந்தைச் செலுத்தவும் ஒற்றைத் தாள் மின்கலங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. படத்தில் ஒற்றைச்சுவர் நானோகுழாயின் அசைவுப் படம் காட்டப்பட்டுள்ளது. |