விக்கிப்பீடியா:ஆக்க நோக்கற்ற தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்கநோக்கற்ற தொகுப்பு அல்லது சீர்குலைக்கும் தொகுப்பு (Disruptive editing) என்பது ஒரு கட்டுரையை மேம்படுத்த அல்லது கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கான முன்னேற்றத்தை தடுக்கும் தொகுப்புகளை மேற்கொள்வதனைக் குறிப்பதாகும். இவ்வகையான தொகுப்புகள் எல்லா சமயத்திலும் நாசவேலை என்பதாகாது. இருந்தபோதிலும், எல்லா நாசவேலைகளும் ஆக்கநோக்கற்ற தொகுப்பாகும். ஒரு புதிய பயனரின் தொகுப்புகளானது விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் விக்கிப்பீடியாவின் வழிகாட்டல்கள் ஆகியனவற்றை சீர்குலைக்கக்கூடிய சூழ்நிலைகள் தெளிவாக இல்லாதபோது அவர்களைத் தடை செய்யக் கூடாது. இது கலைக்களஞ்சியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.விக்கிப்பீடியா:புதியவர்களுக்கு மனஅழுத்தம் தராதீர் என்பதனை கருத்தில்கொள்ளவும்.

ஆக்கநோக்கற்ற பங்களிப்புகள் என்பது எப்போதுமே வேண்டுமென்று செய்யப்படுவது அல்ல. விக்கிப்பீடியா:தேவையான திறன்கள் இல்லாதவிடத்தும் இது நிகழ வாய்ப்புள்ளது.

சீர்குலைக்கும் பயனர்களைக் கையாளும் முறை[தொகு]

பின்வருபவை ஆக்க நோக்கற்ற பங்களிப்புகளைக் கையாள்வதற்கான மாதிரியாகும். சில தீவிர சூழ்நிலைகளில், நிர்வாகிகளின் அறிவிப்புப் பலகையில் அறிவிப்பது சிறந்த முதல் படியாக இருக்கலாம்; சமூகத் தடை வரை இந்தப் படிநிலைகள் இருக்கலாம். பொதுவாக சிக்கலைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுதல் வேண்டும்.

  • ஆக்க நோக்கற்ற முதல் தொகுப்பு:
  • பயனர் மீளமைத்தால் அல்லது மாற்றினால்:
    • தவறான தகவலை பதிவிடுதல் அல்லது சரியான தகவலை மாற்றுதல் ஆகிய செயல்களைச் செய்யும் போது 200-250 வார்த்தைகளில் சுருக்கமாக அவர்களது தவறினை வேறுபாட்டுடன் அல்லது இணைப்புகளுடன் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
    • குறிப்பு:எல்லா நேரங்களிலும், நாகரீகமாக இருங்கள், மேலும் பல மாற்றங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

தடைகள்[தொகு]

  • ஆக்க நோக்கற்ற பங்களிப்புகளைச் செய்பவர்களுக்கு முதலில் எச்சரிக்கை தரப்பட்டு, பின்னர் தடையும் செய்யப்படுவர். குறைந்தபட்சமாக 24 மணி நேரம் தடை செய்யப்படலாம்.
  • முதன்மையாக ஆக்கநோக்கற்ற பங்களிப்புக்காகப் பயன்படுத்தப்படும் கணக்குகள் காலவரையின்றி தடுக்கப்படும்.