விக்கிப்பீடியா:புதியவர்களுக்கு மனஅழுத்தம் தராதீர்
Appearance
ஒவ்வொரு விக்கிமீடியப் பக்கமும், கட்டுரையும், எந்த ஒரு நிரற்கட்டகமும், ஏற்கனவே பங்களிப்பு செய்து வருபவர்களாலும், புதிய பங்களிப்பாளர்களும் இணைந்தே விரிவாக்கப்படுகின்றன.
நினைவிற்கொள்க: பல ஆண்டுகளாக பங்களிப்பு செய்து வரும், எப்பயனரும் புதியவர்களே! ஏனெனில், ஒவ்வொருவரும், ஒரு குறிப்பிட்ட பங்களிப்பில்/பங்களிப்புகளில் மட்டுமே அனுபவம் உடையவர்களாக உள்ளனர். எனவே, கற்றது கைமண் அளவு என்ற நம் முதுமொழிக்கு ஒப்ப, பங்களிப்பு செய்யும், ஒவ்வொருவரும் கற்க வேண்டியன ஏராளம். இந்நோக்கில், எந்த ஒரு விக்கிமீடியப் பங்களிப்பாளர்களும், புதிய பங்களிப்பாளர்களே என்ற கூற்று மிகையல்ல.