விக்கிப்பீடியர் சமூகப் பரப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிப்பீடியா சமூகம்
WM2006 0018.jpg
விக்கிமீடியா நிறுவனம் நடத்தும் பல்வேறு விக்கித்திட்டங்களின் பங்களிப்பாளர்கள் ஆண்டுதோறும் விக்கிமேனியா மாநாட்டில் கூடுகிறார்கள்.

விக்கிப்பீடியா சமூகம் (Wikipedia Community) என்பது இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் தன்னார்வலர் வலையமைப்பைக் குறிக்கும். இவர்கள் விக்கிப்பீடியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

சமூகப் பரப்பு[தொகு]

தொடக்கக் காலங்களில் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்த தன்னார்வலர்களின் அளவு மிகவேகமாக கூடினாலும், 2009ன் பிற்பாடான அண்மைய காலப்பகுதிகளில் புதுப்பயனர்களின் சேர்க்கை வெகுவாகக் குறைந்துவருகின்றது.[1] நவம்பர் 2011 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அனைத்து மொழி விக்கிப்பீடியா பதிப்புகளையும் சேர்த்து, ஏறத்தாழ 31.7 மில்லியன் பேர் விக்கிப்பீடியாவில் பயனர் கணக்கு கொண்டுள்ளனர். இவர்களில் 2,70,000 பேர் ஒவ்வொரு மாதமும் செயற்பாட்டில் உள்ளனர்.[2]

2008ஆம் ஆண்டு, எழுத்தாளரும் விரிவுரையாளருமான கிளே செர்க்கியும் கணினி அறிவியலாளருமான வாட்டன்பர்கும் இணைந்து நடத்திய ஆய்வில், விக்கிப்பீடியாவை உருவாக்குவதற்கு தோராயமாக 100 மில்லியன் மணி நேர மனித உழைப்பு செலவாகியிருக்கும் என்று கணக்கிட்டனர்.[3]

உந்துதல்[தொகு]

விக்கிமேனியா 2012 குழுப்படம்.
விக்கிப்பீடியா சமூகத்தின் முனைப்பை விளக்கும் நிகழ்படம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Suh, Bongwon; et al. (2009). "The singularity is not near: slowing growth of Wikipedia". WikiSym '09 Proceedings of the 5th International Symposium on Wikis and Open Collaboration. ACM. July 15, 2011 அன்று பார்க்கப்பட்டது. Explicit use of et al. in: |author= (உதவி)
  2. List of Wikipedias. Wikimedia Meta-Wiki. Retrieved 2011-11-18.
  3. Shirky, Clay (April 26, 2008). "Gin, Television, and Social Surplus". shirky.com. ஜனவரி 2, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 7, 2011 அன்று பார்க்கப்பட்டது.