வால்டெமர் பவுல்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்டெமர் பவுல்சன்
Valdemar Poulsen
வால்டெமர் பவுல்சன் (~1898)
Valdemar Poulsen (c. 1898)
பிறப்பு23 நவம்பர் 1869
கோபனாகன்
இறப்பு23 சூலை 1942
தேசியம்டென்மார்க்கு
பணி
குறிப்பிடத்தக்க திட்டங்கள்எஃகுக் கம்பிக் காந்த ஒலிப்பதிவி
பவுல்சனின் எஃகுக் கம்பிக் காந்த ஒலிப்பதிவி.
எஃகுக் கம்பியில் ஒலிப்பதிவு செய்யும் கருவிக்கு (டெலிகிராஃபோன், Telegraphone) பவுல்சன் பெற்ற அமெரிக்கப் புத்தாக்குநர் உரிமம். பதிவெண் 661,619

வால்டெமர் பவுல்சன் (Valdemar Poulsen, 23 நவம்பர் 1869 – 23 சூலை 1942) ஒரு டேனிசிய (டென்மார்க்கைச் சேர்ந்தவர்) பொறியியலாளர். இவர் இரும்பிக் கம்பிகளில் முதன்முதலாக 1899 இல் ஒலிப்பதிவு செய்து காட்டியவர்.

வாழ்க்கை வரைவு[தொகு]

பவுல்சன் நவம்பர் 23, 1869 அன்று கோபனாகனில் பிறந்தார்

1898 இலேயே எஃகுக் கம்பிகளில் ஒலியைப் பதிவித்து மீண்டும் கேட்கமுடியும் என்று முதன் முறையாகச் செய்து காட்டியவர். இந்நிகழ்வு அண்மைக் காலத்தில் ஒலிநாடாவில் பதிவுசெய்யத் தொடங்கும் முன்னதாக முதன் முதலாக ஒலிப்பதிவை எஃகுக் கம்பியில் காந்தப்புலம் வழி பதிவு செய்து வழியமைத்துத் தந்த முதல் நிகழ்வு. 1900 இல் பாரிசில் நடந்த தொழில்நுட்பக் கண்காட்சியில் முதன்முதலாக தன் கண்டுபிடிப்பைக் காட்டினார். பெரிய உருளையில், இரும்புக்கம்பியைச் சுற்றி, அதில் ஒலியை மின்காந்த மாற்றத்தால் பதிவுசெய்து, மீண்டும் ஒலியாக மாற்றிக்காட்டியது, ஒலிப்பதிவின் தொடக்கம். இவருடைய கண்டுபிடிப்பை அமெரிக்கப் புத்தாக்குநர் பதிவகத்தில் காப்புரிமம் எடுத்தும் பதிவு செய்துள்ளார்.

பவுல்சனுக்குப் பிறகு பீடர் ஓ. பீடர்சன் (Peder O. Pedersen) இவர் கருத்தைப் பின்பற்றி பிற காந்த ஒலிப்பதிவுக்கருவிகளைக் கண்டுபிடித்தார். இவை எதுவும் ஒலியைப் பதிவு செய்வதிலோ, மீள்விப்பதிலோ மிகைப்பிகள் (amplifier) பயன்படுத்தவில்லை.

1900 இல் பாரிசில் நிகழ்ந்த உலகக் கண்காட்சியில் பவுல்சன் தன் ஒலிப்பதிவியைக் காட்டியபொழுது ஆத்திரியப் பேரரசர் ஃவிரான்சு யோசஃவு (Franz Josef) அவருடைய குரலைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றார். இதுவே உலகில் மிகப் பழையதாக செய்த, இன்று கிடைக்கும் ஒலிப்பதிவாகும்.[1]

இவர் சூலை 23, 1942 இல் இயற்கை எய்தினார்.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்டெமர்_பவுல்சன்&oldid=3863538" இலிருந்து மீள்விக்கப்பட்டது