உள்ளடக்கத்துக்குச் செல்

வாலைவடி நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாட்ரிட்டின் அரண்மனையில் வாலைவடிநீருக்காக வைக்கப்பட்ட குடுவை

வாலைவடி நீர்(Distilled water) என்பது நீரை கொதிக்க வைத்து ஆவியாக்கிப் பின் அதைக் குளிர்வித்து வேறு ஒரு கொள்கலத்தில் சேகரிக்கப்படும் நீராகும். எடுத்துக் கொள்ளப்பட்ட நீரில் காணப்பட்ட நீரின் கொதிநிலை அல்லது அதற்குக் கீழான வெப்பநிலைகளில் கொதிக்காத பொருட்கள் கொதிகலனிலேயே தங்கி விடும். ஆகையால், வாலைவடி நீரானது சுத்திகரிக்கப்பட்ட நீரின் வகைகளில் ஒன்றாகும்.

வரலாறு

[தொகு]

குறைந்த பட்சம் கி.பி 200 ஆம் ஆண்டிலிருந்தாவது கடல் நீரிலிருந்து குடிநீரைப் பெறுவதற்காக வாலை வடித்தல் செயல்முறையானது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்தச் செயல்முறையானது அஃப்ரோடிசியாஸின் அலெக்சாண்டர் என்பவரால் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.[1] இதன் வரலாறு அரிசுடாட்டிலின் மெடியோராலஜிகா(II.3, 358b16) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பத்தி நீரின் வாலை வடித்தலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்தே கூடத் தொடங்குகிறது எனலாம்.[2] ஃப்ரெண்ட்ஷிப் என்ற கப்பலின் தலைவர் இசுரவேல் வில்லியம்ஸ்(1797) என்பவர் இந்தச் செயல்முறையினை மேம்படுத்தினார். இதை அவர் தனது ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளார். [3]

பயன்பாடுகள்

[தொகு]

வேதியியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறை ஆய்வகங்களில் வாலைவடிநீரைக் காட்டிலும் மலிவான அயனிநீக்கம் செய்யப்பட்ட நீரானது முதல் தெரிவாக உள்ளது. ஆனால் அவ்வாறு பெறப்பட்ட மாற்றுகள் தேவையான அளவிற்குத் தூய்மையானவையாக இல்லாத நேர்வில் வாலைவடி நீர் பயன்படுத்தப்படுகிறது. அதனைக் காட்டிலும் தூய்மையான நீர் தேவைப்படும் போது இரண்டு முறை வாலைவடிக்கப்பட்ட நீரானது பயன்படுத்தப்படுகிறது.[சான்று தேவை]

பொதுவாக, சுத்திகரிக்கப்படாத நீர் வேதி வினைகளில் குறுக்கீடு செய்வதுடன் கொதிக்க வைக்கும் போது கனிமப் படிவுகளை விட்டுச் செல்லும் தன்மையையும் கொண்டதாகும். நீர் மற்றும் இதர திரவங்களிலிருந்து மாசுகளை அகற்றும் செயல்முறைகளில் ஒன்றே வடித்திறக்கல் ஆகும்.

உதாரணமாக, குழாயில் பெறப்படும் நீரில் காணப்படும் அயனிகள் மகிழ்வுந்துகள், சரக்குந்துகள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஈய-அமில மின்கலங்களின் வாழ்நாளை வெகுவாகக் குறைத்து விடுகின்றன. இவ்வாறான அயனிகள் தானியங்கி குளிர்விப்பான்களில் உள்ள பொறிகளின் உட்பாகங்களை அரித்து விடுவதாலும், உறைதலுக்கெதிரான காரணிகள் மற்றும் அரிமானத்திற்கெதிரான சேர்க்கைப் பொருட்கள் ஆகியவற்றை பலவீனப்படுத்தி விடுவதாலும் அத்தகைய குளிர்விப்பான்களில் அனுமதிக்கப்படுவதில்லை. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. F. Sherwood Taylor (1945). "The Evolution of the Still". Annals of Science 5 (3): 186. doi:10.1080/00033794500201451. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-3790. 
  2. Aristotle. "Meteorology – Book II". The University of Adelaide. Archived from the original (PDF) on 2010-04-26. பார்க்கப்பட்ட நாள் 2010-06-14.
  3. Trow, Charles Edward (1905). "Chapter XVI". The old shipmasters of Salem. New York and London: G.P. Putnam's Sons. pp. 178ff. இணையக் கணினி நூலக மைய எண் 4669778. Short of Fresh Water Causes Alarm — Captain Williams's Invention to Make Salt Water Fresh — His 'Still' Described by him
  4. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலைவடி_நீர்&oldid=3588141" இலிருந்து மீள்விக்கப்பட்டது