வார்ப்புரு:Solar Saros series 137

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2020 சூன் 21 மறைப்பு சாரோசு தொடர் 137 இன் ஒரு நிகழ்வாகும். இத்தொடரின் நிகழ்வுகள் 18 ஆண்டுகள் 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறுகின்றன. இத்தொடரில் மொத்தம் 70 மறைப்புகள் நிகழ்கின்றன. இத்தொடரின் முதலாவது நிகழ்வு 1389 மே 25 இல் பகுதி மறைப்பாக இடம்பெற்றது. இத்தொடரில் 1533 ஆகத்து 20 முதல் 1695 திசம்பர் 6 வரை முழுமையான மறைப்புகளும், 1713 திசம்பர் 17 முதல் 1804 பெப்ரவரி 11 வரை கலப்பு மறைப்புகளும் நிகழ்கின்றன. 1822 பெப்ரவரி 21 முதல் 1876 மார்ச் 25 வரை முதல் தொகுதி வலய மறைப்புகளும், 1894 ஏப்ரல் 6 முதல் 1930 ஏப்ரல் 28 வரை இரண்டாவது தொகுதி கலப்பு மறைப்புகளும் இடம்பெறுகின்றன. 1948 மே 9 முதல் 2507 ஏப்ரல் 13 வரை இரண்டாவது தொகுதி வலய மறைப்புகள் இடம்பெறுகின்றன. இத்தொடரின் கடைசி நிகழ்வு (இல. 70) 2633 சூன் 28 இல் பகுதி மறைப்பாக நிகழும். இத்தொடரின் மிக நீண்ட முழுமையான மறைப்பு 2 நிமிடங்கள் 55 செக்கன்களுக்கு 1569 செப்டம்பர் 10 நிகழ்ந்தது. இத்தொடரின் மிக நீண்ட வலய மறைப்பு 2435 பெப்ரவரி 28 இல் 7 நிமிடங்கள் 5 செக்கன்களுக்கு நிகழும்[1]

  1. Saros Series Catalog of Solar Eclipses நாசா Eclipse Web Site.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Solar_Saros_series_137&oldid=2990284" இலிருந்து மீள்விக்கப்பட்டது