கதிரவ மறைப்பு சூன் 21, 2020

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாய்வான், பெய்காங் நகரில் வலய மறைப்பு
சூன் 21, 2020-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
SE2020Jun21A.png
Map
மறைப்பின் வகை
இயல்புவலய மறைப்பு
காம்மா0.1209
அளவு0.994
அதியுயர் மறைப்பு
காலம்38 வி (0 நி 38 வி)
ஆள் கூறுகள்30°30′N 79°42′E / 30.5°N 79.7°E / 30.5; 79.7
பட்டையின் அதியுயர் அகலம்21 km (13 mi)
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு6:41:15
மேற்கோள்கள்
சாரோசு137 (36 of 70)
அட்டவணை # (SE5000)9553

வலய கதிரவ மறைப்பு (annular solar eclipse) ஒன்று 2020 சூன் 21 இல் நிகழ்ந்தது. புவிக்கும் கதிரவனுக்கும் இடையே நிலா வரும் போது கதிரவ மறைப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ புவியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் கதிரவனுடையதை விடக் குறைவாக இருக்கும் போது வலய மறைப்பு ஏற்படுகிறது. இதன்போது, கதிரவனின் பெரும்பாலான கதிர்கள் புவிக்கு வருவது தடுக்கப்பட்டு சூரியன் வட்டவலயமாகத் தோன்றுகிறது. வலய மறைப்பு புவியின் ஒரு பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தை சுற்றியுள்ள பகுதியில் தெரியும்.[1]

இந்த கதிரவ மறைப்பு 2019 சூலை 2 மறைப்பிற்குப் பின்னர் ஒரு சந்திர ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்டுள்ளது.

இந்த வலய மறைப்பின் பாதை கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கு சூடான், எத்தியோப்பியா, எரித்திரியா,, சீபூத்தீ உட்பட்ட மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்கா; யெமன், ஓமான் உட்பட்ட தெற்கு அராபியத் தீபகற்பம்; தெற்கு சவூதி அரேபியா; தெற்கு பாக்கித்தான், வடக்கு இந்தியா, நேபாளம், திபெத்து உட்பட தெற்காசியாவின் சில பகுதிகள், இமயமலை; தெற்கு சீனா, தைவான் உட்பட்ட கிழக்காசியா, குவாம் உட்பட்ட மைக்குரோனீசியா ஆகியவற்றூடாக சென்றது.[2] பகுதி மறைப்பு ஆப்பிரிக்காவின் ஏனைய பகுதிகள், தென்கிழக்கு ஐரோப்பா, ஆசியாவின் பெரும்பாலான பகுதிகள் (வடக்கு சைபீரியா, சாவகம் தவிர்த்து), நியூ கினி, வடக்கு ஆத்திரேலியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது. ஐரோப்பாவில் பகுதி மறைப்பு பெருஜியா, லிவீவ், யாரோசிலாவ் ஆகியவற்றில் தென்பட்டது.[2]

ஓமான், மற்றும் இந்தியாவில் து திசம்பர் 26, 2019 வலய மறைப்பிற்குப் பின்னர் 6 மாதத்திற்குப் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது வலய மறைப்பாகும்.[3]

படிமங்கள்[தொகு]

சப்பானின் இமாவரி 8 செயற்கைக் கோளில் இருந்து: நிலாவின் நிழல் பூமியில் பரவுவதைக் காட்டுகிறது.

காட்சியகம்[தொகு]

தொடர்பான மறைப்புகள்[தொகு]

சாரோசு 137[தொகு]

2020 சூன் 21 மறைப்பு சாரோசு தொடர் 137 இன் ஒரு நிகழ்வாகும். இத்தொடரின் நிகழ்வுகள் 18 ஆண்டுகள் 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறுகின்றன. இத்தொடரில் மொத்தம் 70 மறைப்புகள் நிகழ்கின்றன. இத்தொடரின் முதலாவது நிகழ்வு 1389 மே 25 இல் பகுதி மறைப்பாக இடம்பெற்றது. இத்தொடரில் 1533 ஆகத்து 20 முதல் 1695 திசம்பர் 6 வரை முழுமையான மறைப்புகளும், 1713 திசம்பர் 17 முதல் 1804 பெப்ரவரி 11 வரை கலப்பு மறைப்புகளும் நிகழ்கின்றன. 1822 பெப்ரவரி 21 முதல் 1876 மார்ச் 25 வரை முதல் தொகுதி வலய மறைப்புகளும், 1894 ஏப்ரல் 6 முதல் 1930 ஏப்ரல் 28 வரை இரண்டாவது தொகுதி கலப்பு மறைப்புகளும் இடம்பெறுகின்றன. 1948 மே 9 முதல் 2507 ஏப்ரல் 13 வரை இரண்டாவது தொகுதி வலய மறைப்புகள் இடம்பெறுகின்றன. இத்தொடரின் கடைசி நிகழ்வு (இல. 70) 2633 சூன் 28 இல் பகுதி மறைப்பாக நிகழும். இத்தொடரின் மிக நீண்ட முழுமையான மறைப்பு 2 நிமிடங்கள் 55 செக்கன்களுக்கு 1569 செப்டம்பர் 10 நிகழ்ந்தது. இத்தொடரின் மிக நீண்ட வலய மறைப்பு 2435 பெப்ரவரி 28 இல் 7 நிமிடங்கள் 5 செக்கன்களுக்கு நிகழும்[4]

குறிப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]