உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்மொழி இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாய் மொழி இலக்கியம் என்பது ஏட்டில் எழுதப்படாமல் வழி வழியாக ஒரு நாட்டில், ஒரு குறிப்பிட்ட பகுதியில்,நகர்ப்புறங்களில்,கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் இலக்கிய வகை. இது எழுதப்படாத இலக்கியம் என்பதால் இதன் ஆசிரியர் எவர் என குறிப்பிட்டுக் கூற முடியாது.

வாய்மொழி இலக்கிய வகைப்பாடு[தொகு]

பாமரர் பாடல்கள், காற்றிலே மிதந்த கவிதை, ஏட்டில் எழுதாக் கவிதை, நாடோடி பாடல்கள், வாய்மொழிப்பாடல்கள், வாய்மொழி இலக்கியம், கிராமியப்பாடல்கள், கிராமிய இலக்கியம், ஊரகப் பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், நாடோடி இலக்கியம்,

வாய்மொழி இலக்கியப்பிரிவுகள்[தொகு]

கதை சார்ந்த கதையாடல்கள், கதைப்பாடல்கள்,தேவதைக் கதைகள்,புராணக் கதைகள், சிறுவர்கள் சார்ந்த குழந்தைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், ஒலிநயப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், தொழில் சார்ந்த ஏற்றப் பாடல்கள், விதைப்புப் பாடல்கள், நடவுப் பாடல்கள், அறுவடைப் பாட்டுகள், பொலிப் பாட்டுகள், நெல்குத்தும் பாடல்கள், சுண்ணம் இடிப்போர் பாடல்கள், அம்பாப் பாடல்கள், பூப்புப் பாடல்கள், திருமண எள்ளல் பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், மாரடிப் பாடல்கள், கும்மிப் பாடல்கள், உடுக்கடிப் பாடல்கள், வில்லுப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாப்புரட்டுகள், வாழ்த்துகள், வசவுகள்

உசாத்துணை[தொகு]

  1. லூர்து. தே (பதி.)., 1981, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள், திருநெல்வேலி: பாரிவேல் பதிப்பகம்.
  2. லூர்து. தே. டாக்டர்., 1986, நாட்டார் வழக்காற்றியல்-கள ஆய்வு, திருநெல்வேலி: பாரிவேல் பதிப்பகம்.
  3. லூர்து. தே., 1981, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள், திருநெல்வேலி: பாரிவேல் பதிப்பகம்.
  4. லூர்து. தே., 2000, நாட்டார் வழக்காற்றியல் கோட்பாடுகள், பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் மையம்.
  5. லூர்து. தே., 2007, தமிழ்ப் பழமொழிகள் அமைப்பு, பொருண்மை, செயல்பாடு: சென்னை: யுனைடெட் ரைட்டர்ஸ்.
  6. லூர்து. தே., 2007, நாட்டார் வழக்காற்றியல்: சில அடிப்படைகள், பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் மையம்.
  7. லூர்து. தே., 2008, சூழலியம் பழமொழிகளை முன் வைத்து, பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் மையம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்மொழி_இலக்கியம்&oldid=3839151" இலிருந்து மீள்விக்கப்பட்டது