வாய்ப் புற்றுநோய்
வாய்ப் புற்று நோய் (cancer mouth ) என்பது உதடு, நாக்கு, தொண்டை, வாயின் கீழ் தளம், மென்மையான மற்றும் கடின அண்ணம் கன்னத்தின் உள்பகுதி முதலிய உடலுறுப்புகளில் தோன்றும் புற்று நோய்களைக் குறிக்கும்.[1]
இந்நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டுகொள்ளவும் சிறப்பான மருத்துவம் நெய்துகொள்ளவும் உலகளாவிய ஆய்வுகள் நடந்து கொண்டுஇருக்கின்றன. அமெரிக்காவில் வருடம் தோறும் சுமார் 30,000 புதிய வாய் புற்று நோயாளிகள் உருவாகின்றனர்.உடலுறுப்புகள் அதற்கான உயிரணுக்களால் ஆனது. புற்றுநோய் உயிரணு நிலையில் தோன்றுகின்றன.
வாய்ப் புற்று தலையிலும் கழுத்துப் பகுதியிலும் ஏற்படும் புற்று நோயின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. வாய்ப்புற்று பொதுவாக தட்டை உயிரணுக்களால் ஆனது. ஊநீர் மூலமாக உடலின் வேறு இடங்களுக்கு பரவ வாய்ப்புண்டு.பிற இடங்களுக்குப் பரவினாலும் உயிரணுவகை ஒன்றுபோல் உள்ளன. யாருக்கு இந்நோய் வர வாய்ப்புகள அதிகம் என கூற முடியாது. இந்நோய் தொற்றுநோய் அல்ல. புகையிலை,மது,சூரிய ஒளி ,கூரான பற்கள்வாய் தூய்மை இன்மை முதலியன காரணங்களாகும்.[2]
சந்தேகம் எழும் போது மருத்துவரை குறிப்பாக பல் மருத்துவரை கலந்தாலோசித்து விளக்கம் பெறலாம்.
அறிகுறிகள்
[தொகு]நாக்கிலும் கன்னத்ததிலும் வெண்படலம் (Leukoplakia ) ஆறாதப்புண்,ஈறுகளில் இரத்தம் வடிதல், ஆட்டம் கண்ட பல், உணவு உட்கொள்வதில் சிரம்ம்,காது வலி ,கழுத்தில் கட்டி முதலியன.
நோய் அறிதல்
[தொகு]வாயினை முழுவதுமாக ஆய்தல், சதைப் பரிசோதனை. எக்சு கதிர், சி.டி, எம் ஆர் ஐ. ஆய்வுகள். குருதி ஆய்வு.
பக்க விளைவுகள்
[தொகு]தளர்ச்சி,புறத்தோல் கருகுதல் போன்றவை கதிர் மருத்துவத்தின் போது ஏற்படுகின்றன. மருந்து கொடுக்கும் போது முடிஉதிர்தல் ஏற்படுகிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ Edge, Stephen B. (2010). AJCC cancer staging manual. American Joint Committee on Cancer (7th ed.). New York: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387884400. இணையக் கணினி நூலக மைய எண் 316431417.
- ↑ "Tobacco smoking and cancer: a meta-analysis". International Journal of Cancer 122 (1): 155–64. January 2008. doi:10.1002/ijc.23033. பப்மெட்:17893872.