வான் உச்சி
வான் உச்சி (Zenith) என்பது கற்பனையான வான் கோளத்தில் ஒரு கற்பனைப் புள்ளிக்கு செங்குத்தாக மேலே அமைந்திருக்கும். இது புவியீர்ப்பு விசையின் திசைக்கு எதிர் திசையில் செயல்படும். இதற்கு எதிர் திசையில், அதாவது புவியீர்ப்பு திசையில் தாழ் புள்ளி (nadir) செயல்படுகிறது. வான் கோளத்தில் வான் உச்சி மிக உயரமாக இருக்கும் (புவியீர்ப்பு விசையிலிருந்து வெகு தொலைவில் உள்ளதாகக் கொள்வதால் அவ்வாறு கொள்ளப்படுகிறது)
வரலாறு[தொகு]
பண்டைய பாரசீக வானியிலாளர்களால் பயன்படுத்தப்பட்ட سمت الرأس (samt ar-ra's) என்ற அரேபிய சொல்லிருந்து "zenith" என்ற சொல் தோன்றியது. தலைக்கு மேலுள்ள திசை அல்லது தலைக்கு மேலுள்ள பாதை எனப் பொருள்படும் இந்த அராபியச் சொல்லானது, 14 ஆம் நூற்றாண்டில் நடுக்காலத்தில் இடைக்கால இலத்தீனில் தவறுதலாக பயன்படுத்தப்பட்டு[1] பின்னர் திசை என்ற அர்த்தம் கொண்ட 'samt' என்ற வார்த்தையாக திரிபடைந்தது. 17 ஆம் நூற்றாண்டில் செனித் ('senit'/'cenit') என்று அழைக்கப்பட்ட பழைய பிரெஞ்சு மொழி வார்த்தையிலிருந்து வான் உச்சி 'zenith' என்ற வார்த்தைத் தோன்றியது.[2][3]
விளக்கம் மற்றும் பயன்பாடு[தொகு]

வான் உச்சி என்பது வான் கோளத்தின் தோற்ற நிலை சுற்றுப்பாதையில், நோக்குநர் பார்வையில் மிக உயரமானப் புள்ளியைக் குறிக்கும்.[4] சூரியன் இருக்குமிடத்தை உணர்த்தவே இவ் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. வானியல் அடிப்படையில் சூரியனுக்குத் தனியாக வான் உச்சியென்று இல்லை, நோக்குநரின் தலைக்கு நேர் மேலே உள்ள புள்ளியே வான் உச்சியாகக் கொள்ளப்படுகிறது.
அறிவியல் கோட்பாட்டின் படி, வான் உச்சியின் திசைக்கும், நட்சத்திரங்களின் திசைக்கும் இடைப்பட்ட கோணம் வான் உச்சி கோணம் எனப்படுகிறது.
அடிவானத்திலிருந்து 90 டிகிரி கோணத்தில், அதாவது வான் உச்சியில் சூரியன் இருக்கும் நிகழ்வு, கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே நிகழ்கிறது.
சூரியன் இருக்கும் போது, தாழ் புள்ளியென்பது நேரெதிர் (antipode) திசையில் செயல்படுகிறது.
வானியலில், அடிவானக் கோணமும் வான் உச்சி கோணமும் நிரப்புக்கோணங்கள் ஆகும். இவ்விரு கோணங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தானவை.
வானியலில், தீர்க்க ரேகை என்பது வான் உச்சியைக் கொண்டு அளக்கப்படுகிறது. வான் கோளத்தில் வான் உச்சி மற்றும் தாழ் புள்ளியைக் கொண்டு வான் துருவங்கள் (celestial poles) கணக்கிடப்படுகின்றன.
நட்சத்திரங்களின் நிலையை துல்லியமாக அறிய, செங்குத்தாக தொலைநோக்கி அமைக்கப்படுகிறது, இதை வான் உச்சி தொலைநோக்கி என அழைக்கிறார்கள்.
நாசா சுற்றுப்பாதை சிதைபொருள் வானாய்வகம் (NASA Orbital Debris Observatory) மற்றும் பெரிய வான் உச்சி தொலைநோக்கி (Large Zenith Telescope) ஆகியவை வான் உச்சி தொலைநோக்கிகளுக்கு சில உதாரணங்கள். இவ்வகை தொலைநோக்கிகளில் திரவ ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேலே, கீழே என்பதற்கு பதிலாக வான் உச்சி, தாழ் புள்ளி என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Corominas, J. (1987). Breve diccionario etimológico de la lengua castellana (3rd ). Madrid. பக். 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-42492-364-8.
- ↑ "Etymology of the English word zenith". My Etymology. மார்ச் 3, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 21, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Zenith". Dictionary.com. March 21, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Zenith". Merriam-Webster. March 21, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- Glickman, Todd S. (2000). Glossary of meteorology. American Meteorological Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-878220-34-9. https://archive.org/details/glossaryofmeteor0000unse_g2i9.
- McIntosh, D. H. (1972). Meteorological Glossary (5th ). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8206-0228-8.
- Picoche, Jacqueline (2002). Dictionnaire étymologique du français. Paris: Le Robert. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-85036-458-7.