வான்சுவா திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வான்சுவா
வகைநாட்டுப்புறம்
காலப்பகுதிஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது
பரப்புஅசாம், மேகாலயா, இந்தியா
புரவலர்கள்திவா

வான்சுவா (Wanshuwa) என்பது இந்தியாவின் அசாம்மாநிலத்தின் கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்திலுள்ள ஆம்கா மற்றும் மர்ஜோங் கிராமங்களில் வாழும் திவா மக்களின் ஒரு முக்கியமான மத விழாவாகும். [1] இது ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. பொதுவாக, இந்தத் திருவிழா ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும். விழா பொதுவாக செவ்வாய் கிழமை தொடங்கி வியாழன் அன்று முடிவடையும்.[2] "சாம்" என்ற மரத்தாலான வீட்டில் வசிக்கும் கிராமத்தின் தலைவரான சாங்தோலோயின் இல்லத்தில் புதன்கிழமை முக்கிய விழா நடைபெறுகிறது. இந்த தங்குமிடங்கள் ஓரளவு நிலத்தடியில் புதைக்கப்பட்டு வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. சாமாடி என்பவர் பாங்சி மற்றும் துராங் இசைக் கருவிகளை இசைப்பார். கிராம் என்ற முரசின் தாளத்திற்கு நடனமாடிக்கொண்டு, உறுப்பினர்கள் ஈரமான அரிசியை மாவாக மாறும் வரை "லோம்போர்" (மர பூச்சி) கொண்டு அரைக்கிறார்கள். நடனத்திற்குப் பிறகு, அரைத்த அரிசி மாவை தண்ணீரில் சிறிது கலந்து, விழாவில் கலந்து கொண்டவர்கள் மீது தெளிக்கப் பயன்படுகிறது. மீதமுள்ள மாவை வேகவைத்து வான்ருசா என்ற உணவைத் தயாரிப்பதற்காக கிராம மக்களிடையே விநியோகிக்கப்படுகிறது. மறுநாள் காலை அவர்கள் வான்ருசாவை தாயரித்து சாங்தோலோயின் வீட்டிற்கு கொண்டு வந்து சோடோங்க ராஜா மற்றும் மால்தேவா ராஜா ஆகியோருக்கு வழங்குகிறார்கள். வியாழன் மாலை வான்சுவா திருவிழா முடிவடைகிறது. ஆம்கா மற்றும் மார்ஜோங் குழுவின் திவா வான்குரி அல்லது வான்சுவா பண்டிகையின் நாளில் அரைத்த மாவை புனித அரிசியாக கருதுகின்றனர். [3]

வான்சுவா விழாவுடன் தொடர்புடைய ஒரு புராணத்தின் படி, [4]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்சுவா_திருவிழா&oldid=3655185" இலிருந்து மீள்விக்கப்பட்டது