உள்ளடக்கத்துக்குச் செல்

வான்கூவர் திரைப்படக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வான்கூவர் திரைப்படக் கல்லூரி
வகைOpen
உருவாக்கம்1987 (1987)
தலைவர்ஜேம்ஸ் கிரிஃபின்
அமைவிடம், ,
இணையதளம்Vancouver Film School

வான்கூவர் திரைப்படக் கல்லூரி (Vancouver Film School - VFS) கனடாவின் வடமேற்கே பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தின் வான்கூவர் நகரில் உள்ள தனியார் பொழுதுபோக்கு சார்ந்த கலைக் கல்லூரி ஆகும்.

இந்த கலைக் கல்லூரி 1987-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 2007-ம் ஆண்டு இக்கல்லூரியின் 20-ம் ஆண்டு விழாவையொட்டி புதிய மாணவர்களுக்கென்று 10 லட்சம் டாலர்கள் ஊக்கத்தொகை வழங்க ஒதுக்கப்பட்டது. 2008 மார்ச் மாதம் வான்கூவர் திரைப்படக் கல்லூரி யூ டியூப் இணையதளத்துடன் இணைந்து சிறந்த படைப்புகளுக்கான போட்டி ஒன்றை நடத்தி தேர்வு பெற்ற முதல் மூன்று போட்டியாளர்களுக்கு கல்விக் கட்டண ஊக்கத்தொகை வழங்கியது.[1]

வரலாறு

[தொகு]

1987-ம் ஆண்டு 6 மாணவர்களுடன் இக்கல்லூரி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சி அடைந்தது இக்கல்வி நிறுவனம். இங்கு திரைப்பட தயாரிப்பு, முப்பரிமாண (3டி) அனிமேஷன் மற்றும் விசுவல் எபெக்ட்ஸ், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான நடிப்பு, திரைக்கதை - வசனம், டிஜிட்டல் கம்ப்யூட்டர் கேம்ஸ் தயாரிப்பு போன்ற திறன்களில் ஓராண்டு கால பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

வான்கூவர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு புகழ்பெற்ற நகரம் ஆகும். ஆண்டுதோறும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு இந்நகரில் நடைபெறுவது வழக்கம்.[2]

மேற்கோள்கள்

[தொகு]